இந்தியாவில் தணிகிறது கொவிட் கோரத்தாண்டவம்

இந்தியாவில் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட வைத்தியசாலையில் இருந்து குணமடைந்து வெளியேறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மே14 இல் பாதிப்பு எண்ணிக்கை 3.26 இலட்சமாகவும், குணமடைவோர் எண்ணிக்கை 3.53 இலட்சமாகவும் பதிவான நிலையில், நேற்றுமுன்தினம் நிலைவரப்படி (மே 15) இந்தியாவில் பாதிப்பு மேலும் குறைந்து, குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.

நேற்றுக் காலை வரையான 24 மணிநேரத்தில் 3,62,437 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 2 கோடி 7 இலட்சத்து 95 ஆயிரத்தைத் தாண்டியது. ஒரேநாளில் 3,11,170 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 2 கோடி 46 இலட்சத்து 84 ஆயிரத்தை கடந்தது. 36.18ஈலட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று வரை 2,70,284 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் வீதம் 84.25 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் வீதம் 1.09 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 14.66 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்தியாவில் நேற்றுமுன்தினம் (மே 15) ஒரே நாளில் 18,32,950 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதுவரை இந்தியாவில் 31 கோடி 48 இலட்சத்து 50 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று (மே 16-ம் திகதி) காலை 10:10 மணி நிலைவரப்படி உலகில் கொரோனாவால் 16 கோடி 31 .லட்சத்து 79 ஆயிரத்து 059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 33 இலட்சத்து 83 ஆயிரத்து 606 பேர் பலியாகினர். 14 கோடி 14 இலட்சத்து 78 ஆயிரத்து 916 பேர் மீண்டனர். இதேவேளை தலைநகர் புதுடில்லியில் கெரோனா தொற்று வெகுவாக குறைந்து வருவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:

கொரோனா நோய்த் தொற்றுகள் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு கடந்த ஏப்ரல் 19 முதல் டில்லியில் பயணக் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டது. ஊரடங்கால் டில்லியில் கடந்த ஒரு வாரமாக படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது.

கடந்த மாதம் ஏப்ரல் 21-ம் திகதி ஒருநாள் பாதிப்பு கிட்டத்தட்ட 28,395 ஆகப் பதிவாகியிருந்தது. கடந்த வாரம் கொரோனா தொற்று எண்ணிக்கை 20 ஆயிரமாகக் குறைந்தது. தற்போது கடந்த 24 மணி நேரத்தில், டில்லியில் வெறும் 6,500 மட்டுமே பதிவாகியுள்ளன.

நேர்மறை வீதம் 11 சதவீதமாகக் குறைந்துள்ளது. வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஒக்சிஜன் தேவைப்பட்டால் வீடுகளுக்கே கொண்டு வழங்க முடிவு செய்துள்ளோம்.

ஊரடங்கால் கொரோனா தாக்கம் டில்லியில் வெகுவாக குறைந்து வருகின்றது. இருந்தும் பொது முடக்கம் மே 17 வரை(இன்று) நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 


Add new comment

Or log in with...