நடுவானில் விமானங்கள் விபத்து; யாருக்கும் பாதிப்பின்றி தரையிறக்கம்

அமெரிக்காவில் டென்வெர் நகரம் அருகே இரண்டு சிறு விமானங்கள் நடுவானில் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகின.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த யாருக்கும் பாதிப்பின்றி இரண்டு விமானங்களும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த இரண்டு சிறு விமானங்களும் டென்வெர் புகரில் அமைந்துள்ள சிறிய விமானநிலையத்தில் தரையிறங்கும்போது மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன.

கொலராடோவைச் சேர்ந்த கீ லைம் ஏர் என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான இரட்டை என்ஜின்கள் பொருத்திய சரக்கு விமானம் டென்வெர் பகுதியில் உள்ள விமான நிலையத்தில் புதன்கிழமை தரையிறங்க முற்பட்டது. அந்த விமானத்தில் ஒரு விமானி மட்டுமே இருந்தார். அப்போது, ஒரு விமானி மற்றும் ஒரு பயணியுடன் வந்த சிறிய கிளைடர் விமானம், சரக்கு விமானத்தின் நடுப் பகுதியில் மோதியது.

இந்த விபத்தில் சரக்கு விமானத்தின் நடுப்பகுதி பெரிதாக உடைந்துள்ளது. இருந்தபோதும், சரக்கு விமானத்தை ஓட்டிய விமானி அதனை பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளார்.


Add new comment

Or log in with...