Durdans ஹார்ட் சென்ரரில் TAVI இருதய சிகிச்சை | தினகரன்

Durdans ஹார்ட் சென்ரரில் TAVI இருதய சிகிச்சை

திறந்த இருதய வால்வு மாற்றுச் சிகிச்சை முன்னெடுப்பது எனும் சிந்தனை திடமான நோயாளியையும் அச்சுறுத்துவதாக அமைந்திருக்கும்.

வயது முதிர்ந்த நோயாளர்கள் அல்லது ஏற்கனவே சத்திர சிகிச்சை மேற்கொண்டவர்கள் அல்லது ஏற்கனவே இழுப்பு, நுரையீரல் நோய்கள், சிறுநீரக நோய், வலுக்குறைவானவர்கள், திறந்த இருதய சத்திர சிகிச்சை மேற்கொண்டவர்கள் சத்திர சிகிச்சையின் போதும் அதன் பின்னரும் பெருமளவு ஆபத்துக்களுக்கு முகங்கொடுப்பார்கள் என்பதில் சந்தேகங்கள் இல்லை.

ஒவ்வொரு வருடமும், பெருநாடி வாயில் மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டிய அவ்வாறான நோயாளர்கள் அதிகளவு இடர்களைக் கொண்டவர்களாக காணப்படுவதுடன், திறந்த இருதய பெருநாடி வாயில் மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொள்வதை தவிர்த்து வருவதுடன், அதனால் காலப் போக்கில் இருதயம் செயலிழப்பு அல்லது திடீர் மரணத்துக்கு ஆளாகின்றனர்.

மருத்துவத்துறையில் புத்தாக்கம் மற்றும் முன்னேற்றத்தின் காரணமாக, கடந்த சில ஆண்டுகளில் திறன் படைத்த மருத்துவ நிபுணர்களினூடாக, அதிகளவு இடர்கள் நிறைந்த வால்வு மாற்று சத்திரசிகிச்சை என்பது TAVI (Transcatheter Aortic Valve Implantation) முறையினூடாக எளிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பானதாகவும் அமைந்துள்ளது.

ஐக்கிய இராஜ்ஜியத்திலும் மேலும் பல ஐரோப்பிய நிலையங்களிலும் இந்த சிகிச்சையை முன்னெடுப்பதற்கு பல ஆண்டு காலம் பயிற்சிகளைப் பெற்றுள்ள வைத்திய ஆலோசகரான பந்துல அதாவுடஆரச்சி, Durdans Heart Centre இல் இதுவரையில் இவ்வாறான 5 TAVI சத்திர சிகிச்சைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளார். இலங்கையில் முதன் முறையாக நோயாளர் சுயநினைவில் இருக்கும் போது, சம்பந்தப்பட்ட இடத்துக்கு மாத்திரம் விறைப்பூசி இடப்பட்டு இந்த சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அதனூடாக, இலங்கையில் TAVI வால்வுகளை வெற்றிகரமாக உள்வைத்த முதலாவது சுயாதீன வைத்திய நிபுணர் எனும் பெருமையை வைத்தியர். பந்துல அதாவுடஆரச்சி கொண்டுள்ளார். morphologically abnormal bicuspid வால்வுகள் மற்றும் சாதாரண tricuspid வால்வுகள் ஆகியவற்றுக்கு இலங்கையின் முதலாவது TAVI ஐ மேற்கொண்டமை மற்றும் இரு மாறுபட்ட கட்டமைப்புகளில் சாதனங்களை உள்வைத்தமை போன்றவற்றுக்கான பாராட்டுதலையும் இவர் பெற்றுள்ளார்.

உடலின் குருதி பாய்ச்சும் பொறிமுறையில் பெருநாடி வாயில் முக்கிய பங்காற்றுகின்றது. இதன் செயலிழப்பானது, சகல முக்கிய அங்கங்களிலும் பெரும் சிக்கல் நிலையை தோற்றுவிக்கும். வயது முதிர்வுடன் தொடர்புடைய சிதைவுகள் மற்றும் பிறப்பிலிருந்து காணப்படும் குறைபாடுகள் போன்றன பெருநாடி வாயில் ஒடுங்குவதற்கு ஏதுவாக அமைந்திருப்பதுடன், குருதிப் பாய்ச்சலை கட்டுப்படுத்துகின்றன. இதனால் உடலின் ஏனைய பாகத்துக்கு ஒட்சிசன் செல்வது தடைப்படுகின்றது. முறையான முன் திட்டமிடலுடனான Transcatheter Aortic Valve Implantation (TAVI) ஊடாக தம்மால், சில நோயாளர்களில் வால்வை 90 நிமிடங்களில் மாற்றீடு செய்யக்கூடியதாக இருந்ததாக வைத்தியர் பந்துல அதாவுடஆரச்சி குறிப்பிட்டார்.

அதிகளவு ஆபத்து நிறைந்த நபர்களில் சத்திரசிகிச்சையை மேற்கொண்ட போதிலும், திறந்த இருதய சிகிச்சை மற்றும் பொது மயக்கமருந்து வழங்கி மேற்கொள்ளப்படும் சத்திர சிகிச்சைகளில் காணப்படும் இடர்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானதாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

சேதமடைந்த வால்வு பகுதிகளை அவதானமாக அகற்றிய பின்னர் கவனமான முறையில் balloon-expandable (MyVal or Edwards)அல்லது சுயமாக விரிவடையும் (Medtronic Evolut R) transcatheter இருதய பெருநாடி வால்வை கவனமாக தெரிவு செய்து மாற்றீடு செய்வதைக் கொண்டுள்ளது.

சிறிய துளையிடலினூடாக உடலினுள் catheter ஐ வால்வுடன் உட்செலுத்தி பாதிக்கப்பட்ட வால்வு பகுதிக்கு சென்றடையச் செய்து இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுவதுடன், இதன் போது நோயாளி சுய நினைவில் இருப்பார். இதற்கு சுமார் 90 நிமிடங்கள் மாத்திரமே தேவைப்படுகின்றது.

TAVI இனால் குறுகிய காலப்பகுதியில் குணமடைய முடியும் என்பதுடன், 24 மணி நேரத்தினுள் நடமாடக்கூடியதாக இருக்கும். தொற்றுகள், இழுப்பு போன்ற ஆபத்துகளை தணித்துள்ளதுடன், சுவாசக் கருவிகளில் தங்கியிருக்க வேண்டிய தேவை போன்றவற்றை இல்லாமல் செய்துள்ளது. நோயாளிகளின் வயது மற்றும் அவர்களில் காணப்படும் ஏனைய மருத்துவ குறைபாடுகளைப் பொறுத்து 3 நாட்களினுள் வைத்தியசாலையிலிருந்து வெளியேற முடியும்.


Add new comment

Or log in with...