நகங்களை அலங்கரிக்கும் நகைகள் | தினகரன்

நகங்களை அலங்கரிக்கும் நகைகள்

பெண்களையும் நகைகளையும் பிரிக்கவே முடியாது என்பர். பண்டைய காலம் முதல் இன்றைய நவநாகரிக காலம் வரை பெண்களின் இரசனைக்கேற்ப நகைகள் பல்வேறு விதங்களில் மாற்றம் பெற்று வந்திருக்கின்றன.

காதணி, கழுத்தணி என்று ஆரம்பித்து தற்போது நகங்களில் கூட நகைகள் அணிவிக்கப்படுகின்றன. நகங்களில் ஓவியங்கள் வரைந்து துளையிட்டு வலையங்கள் அணிவது போன்றவை தான் நடைமுறையில் இருந்தன.
தற்போது அவற்றுக்கெல்லம் ஒருபடி மேலே போய் நகங்களை அலங்கரிப்பதற்கென நகைகள் வந்து விட்டன.

அவை தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் சாதாரண உலோகங்களிலும் தயாரிக்கப்படுகின்றன. சில நூறு ரூபாய்களில் ஆரம்பித்து பல இலட்சங்கள் வரை அவற்றின் விலை உள்ளது.

முழுமையாக நகத்தை மறைக்கும் கவசம் போலவும், விரலையும் நகத்தையும் இணைக்கும் சங்கிலி போல் நகங்களில் ஒட்டிக்கொள்ளும் வகையிலும் விதவிதமாக அவை கிடைக்கின்றன.
சந்தையில் புதிதாக வந்திருக்கும் நகங்களுக்கான நகைகளை இளம் வயது பெண்களும், மணப்பெண்களும் விரும்பி அணிகின்றனர்.


Add new comment

Or log in with...