ஜாயா அணி சம்பியன் | தினகரன்

ஜாயா அணி சம்பியன்

மூதூர் கிரிக்கெட் சம்மேளனம் நடாத்திய வெஸ்டர்ன் பிரீமியர் லீக் 35 ஓவர்கள் கொண்ட கடினபந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஜாயா அணி வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

மூதூர் மத்திய கல்லூரி மைதானத்தில் (13) இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற ஜாயா அணி முதலில் துடுப்பெடுத்தாடி 34.1 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

177 என்ற வெற்றியிலக்கிற்காக பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய லெஜன்ட்ஸ் அணியை 145 ஓட்டங்களுக்குள் வீழ்த்தி ஜாயா அணி 31 ஓட்டங்களால் வெற்றி வாகை சூடி ஜாயா அணி சம்பியனாக தெரிவாகியது குறிப்பிடத்தக்கதாகும்.

ஜாயா அணி ஆரம்பிக்கப்பட்ட இதுவரை காலமும் கடின பந்து தொடர் ஒன்றில் கைப்பற்றிய முதலாவது கிண்ணம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவ் இறுதிப்போட்டியில் அதிதிகளாக தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் டொக்டர். ஷியா மற்றும் பொதுஜன பெரமுன மூதூர் தொகுதி இணைப்பாளர் முபாரக் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

தோப்பூர் குறூப் நிருபர்


Add new comment

Or log in with...