இளமானி பட்டதாரிகளுக்கு மடிக்கணனிகள்; Softlogic Information Technologies நிறுவனத்துடன் கைகோர்த்துள்ள இலங்கை தொழில்நுட்ப கம்பஸ் | தினகரன்

இளமானி பட்டதாரிகளுக்கு மடிக்கணனிகள்; Softlogic Information Technologies நிறுவனத்துடன் கைகோர்த்துள்ள இலங்கை தொழில்நுட்ப கம்பஸ்

டிஜிட்டல் உருமாற்றத்தை மாணவர்கள் பின்பற்ற உதவும் முயற்சியாக, Softlogic Information Technologies Pvt Ltd நிறுவனம் இலங்கை தொழில்நுட்ப கம்பஸ்ஸுடன் (SLTC) இணைந்துள்ளது.

இந்த இணைப்பானது SLTC இன் 2021 ஆம் ஆண்டில் உள்வாங்கப்படும் 1000 இற்கும் அதிகமான மாணவர்கள் தங்கள் உயர் கல்வியைத் தொடர சிறப்பு தள்ளுபடி விலையில் ஒரு புதிய மடிக்கணினியை கொள்வனவு செய்ய உதவுகின்றது.

இந்த இணைப்பு குறித்து Softlogic ITதலைமை நிர்வாக அதிகாரியும் இயக்குனருமான ரோஷன் ரஸூல் கூறுகையில்,

உயர் கல்வி வாய்ப்புகளில் காலடி எடுத்து வைக்கும் புதிய இளமானி பட்டதாரிகளுக்கு ஆதரவளிக்க SLTC உடன் இணைந்து கொள்வதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்த முன்னோடி முயற்சியால், புதிய தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதன் மூலம் உயர்கல்வியில் தற்போதுள்ள இடைவெளிகளைக் குறைக்க எதிர்பார்க்கிறோம், இது காலத்தின் தேவை என்று நாங்கள் கருதுகிறோம். ஒரு சமூக பொறுப்புள்ள நிறுவனம் என்ற வகையில், மாணவர்கள் தங்கள் உயர் கல்வியில் வெற்றிபெறவும், வாழ்க்கையில் உயர் நிலைகளை அடையவும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம்.

டிஜிட்டல்மயமாக்கல் உலகெங்கிலும் உள்ள உயர் பல்கலைக்கழகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கலப்பின கற்றல் மாதிரியின் தோற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. இன்று மிகவும் வசதியான இந்த கற்றல் மாதிரியில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. இது மாணவர்களுக்கு நேரடியான விரிவுரைகள் மற்றும் இணைய வழி விரிவுரைகள் (virtual lectures) இரண்டிலும் பங்கேற்க உதவுகின்றது. இது பாரம்பரிய கற்றல் அனுபவத்திலிருந்து விலகிச் செல்கிறது. இந்த பின்னணியில், Softlogic IT மற்றும் SLTC ஆகியவற்றின் இணைப்பானது இளமானி பட்டதாரிகளுக்கு அவர்களின் உயர் கல்வியைத் தொடர தொழில்நுட்பத்தின் ஆதரவுடன் உலகலாவிய ரீதியில் வாய்ப்புகளை வழங்குகிறது.


Add new comment

Or log in with...