'கொஸ்கொட தாரக்க' துப்பாக்கிச் சூட்டில் பலி | தினகரன்

'கொஸ்கொட தாரக்க' துப்பாக்கிச் சூட்டில் பலி

பாதாள உலகக் குழுத் தலைவரான 'கொஸ்கொட தாரக்க’ என அழைக்கப்படும் தர்மகீர்த்தி தாரக்க பெரேரா விஜேசேகர பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.

விசேட சுற்றிவளைப்புக்காக, மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் நேற்று (13) அதிகாலை மீரிகம – ரேந்தபொல பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதன்போது ஏற்பட்ட கலகத்தில், பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதுடன், கொஸ்கொட தாரக்க காயமடைந்த நிலையில் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும், சிகிச்சை பலனின்றி சந்தேகநபர் உயிரிழந்ததுடன், சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.


Add new comment

Or log in with...