ரோஸ் ​வோட்டர் டோனர் | தினகரன்

ரோஸ் ​வோட்டர் டோனர்

ரோஸ் ​வோட்டர் டோனரை முகத்தில் ஒரு முறை ஸ்பிரே செய்தால் போதும் வெயிலுக்கு புத்துணர்வை அளிக்கும். ரோஸ் வோட்டர் டோனரை சிரமம் இல்லாமல் வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம்.

ஒரு பாத்திரம் நிறைய ரோஜா இதழ்களை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தண்ணீர் ஊற்றி, ரோஜா இதழ்களையும் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

10 நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். பிறகு ரோஜாவின் நிறம் வெளிர்ந்து அதன் நிறங்கள் தண்ணீரில் கரைந்திருக்கும்.

அதை அப்படியே சூடு ஆற காற்றோட்டமாக வையுங்கள். சூடு தணிந்ததும் ஸ்பிரே போத்தலில் ஊற்றி வையுங்கள்.

இந்த ரோஸ் வோட்டரை முகத்திற்கு ஸ்பிரே செய்தால் ஈரப்பதம், பருக்கள் இன்மை, கருமையின்மை, எண்ணெய் இல்லாத சருமம் என பல நன்மைகளைப் பெறலாம்.


Add new comment

Or log in with...