மே 17இல் 42 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்கம்; 8 பிரிவுகள் விடுவிப்பு | தினகரன்

மே 17இல் 42 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்கம்; 8 பிரிவுகள் விடுவிப்பு

மே 17இல் 42 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்கம்; 8 பிரிவுகள் விடுவிப்பு-42 More GN Divisions Isolated-14-05-2021

எதிர்வரும் மே 17ஆம் திகதி அதிகாலை 4.00 மணி முதல், மட்டக்களப்பு, திருகோணமலை, குருணாகல் மாவட்டங்களில் மேலும் 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் புதிதாக முடக்கப்படவுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் மே 17 அதிகாலை 4.00 மணி வரை, நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த பிரதேசங்களில் கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து அவற்றை எதிர்வரும் 17ஆம் திகதி வரை முடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் 08 கிராம அலுவலர் பிரிவுகள் அன்றையதினம் (17) தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல் வருமாறு...

PDF File: 

Add new comment

Or log in with...