அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் 10 நாட்களில் 10,000 கட்டில்கள் திட்டம்

கொவிட்-19 தொற்றாளர்களுக்கு உதவும் வகையில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வின் எண்ணக்கருவுக்கமைய ஆரம்பிக்கப்பட்ட 10 நாட்களில் 10,000 கட்டில்கள் வேலைத்திட்டத்தில் தயார்ப்படுத்தப்பட்ட கட்டில்களை அந்தந்த சிகிச்சை மையங்களுக்கு நன்கொடையாக வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சர் சமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன ஆகியோரின் தலையீட்டிற்கு மத்தியில், மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்தினால் பழுதடைந்த அவசர சிகிச்சை பிரிவின் 200 கட்டில்கள் உள்ளிட்ட 700 கட்டில்கள் மீள பயன்பாட்டுக்கு உகந்த வகையில் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன. 

அத்துடன் கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்தவின் தலையீட்டில் அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனத்தின் இயந்திர பணிமனையினுள் தயார்படுத்தல் நிறைவுசெய்யப்பட்ட 50 கட்டில்கள் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து அவை கொஸ்கம வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டது. 

கொவிட்19 தொற்றுக்குள்ளான பெண்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு 250 படுக்கைகளை கொண்ட இடைக்கால சிகிச்சை மையமாக மாறியுள்ள கம்பளை இளைஞர் அணி மையத்தை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ (11) பார்வையிட்டார். 

இவ்வேலைத்திட்டத்தில் தன்னார்வத்துடன் இணைந்து கொண்டு கட்டில்களை தயார்ப்படுத்துவதற்கு முன்வந்த இளைஞர் யுவதிகளை ஊக்குவிக்கும் வகையில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கட்டில்கள் தயார்ப்படுத்தப்படும் இடங்களுக்கு சென்று பார்வையிட்டார்.    


Add new comment

Or log in with...