நீண்டகால விடுமுறை காலத்தை வீடுகளில் தங்கியிருந்து கழிக்கவும் | தினகரன்

நீண்டகால விடுமுறை காலத்தை வீடுகளில் தங்கியிருந்து கழிக்கவும்

- இராணுவத் தளபதி சவேந்திர சில்வா வேண்டுகோள்

நாடு முழுவதும் நேற்று இரவு 11.00 மணி முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 04.00 மணி வரை பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், அனைவரும் வீட்டுக்குச் சென்று நீண்ட வார இறுதி விடுமுறையை வீட்டிலேயே கழிக்க வேண்டுமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அனைத்து மக்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார். 

நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், அனைவரும் நீண்ட வார இறுதி விடுமுறையை வீட்டிலேயே கழித்து அதிகபட்ச ஆதரவை வழங்குவார்களென்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார். 

எனினும், இந்த கட்டுப்பாடுகள் அத்தியாவசிய சேவைகளுக்கும், நாட்டின் இயல்பான செயல்பாட்டுடன் தொடர்புடைய தடுப்பூசி திட்டத்துக்கும் பொருந்தாதென்றும் அவர் தெரிவித்தார்.  

நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் மே 31 வரை விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து விளக்கமளிக்கும்போதே இராணுவ தளபதி இதனை தெரிவித்தார்.  


Add new comment

Or log in with...