இலங்கையில் புதிய OPPO A54 வெளியீடு | தினகரன்

இலங்கையில் புதிய OPPO A54 வெளியீடு

உலகளாவிய முன்னணி ஸ்மார்ட் சாதன தரக்குறியீடான OPPO, OPPO A54 இனை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது

வடிவமைப்பு மற்றும் சிறந்த பயன்பாடு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ள A54 ஆனது, அதன் நேர்த்தியான தோற்றம் மற்றும் அழகிய புகைப்படங்களை பிடிக்க எவ்வாறு உதவுகிறது என்பவற்றின் மூலம் தெளிவாகத் தெரிகிறது. இது அதன் பின்பக்க மூடி ஆக்கப்பட்ட பொருளிலிருந்து ஆரம்பமாவதுடன், அதன் முப்பரிமாண சட்டத்திற்காக உலோகப் பொருளைப் பயன்படுத்துவதோடு, வலுவான மற்றும் அரிதாக வளையக்கூடிய கட்டமைப்பிற்கு உதவுவதன் மூலம், கைகளுக்கு வசதியான உணர்வையும் வழங்குகிறது. இதன் காரணமாக, A54 ஆனது 192 கிராம் நிறை மற்றும் 8.4 மிமீ தடிப்பத்துடன் அமைந்துள்ளது.

கையடக்கத் தொலைபேசியின் ஒட்டுமொத்த தோற்றத்தையும் உணர்வையும் சீரமைக்க, மத்தியில் அமைந்த சட்டக அமைப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

XINDA Lanka (OPPO Sri Lanka) நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி, பொப் லி இது தொடர்பில் தெரிவிக்கையில், “எமது பயனர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்த அல்லது பூர்த்தி செய்வதற்கான ஒரு Series வடிவமைக்கப்பட்டுள்ளது.

OPPO A54 ஆனது, சமகால வடிவமைப்போடு உயர்நிலை செயல்திறனை சமப்படுத்துவதன் மூலம் அதனை பூர்த்தி செய்கிறது.

அதன் பாரிய 5,000mAh மின்கலம் மற்றும் 18W Fast Charge வசதியானது, உங்களது முழு நாளிலும் நீங்கள் முழுமையாக இயங்குவதை உறுதிசெய்கிறது. செயற்றிறன் மிக்க A54 ஸ்மார்ட்போன் ஆனது, எவ்வித ஏமாற்றமுமின்றி உங்கள் பொழுதுபோக்குகளை நீங்கள் அனுபவிப்பதை உறுதிப்படுத்தும் வகையிலான, போதிய சேமிப்பகம் மற்றும் நினைவகத்தை கொண்டுள்ளது” என்றார்.

அதன் பின்புற கெமரா தொகுதியில் 13MP பிரதான கெமரா, உருப் பெருக்க காட்சிகளுக்கான 2MP மெக்ரோ கெமரா, மற்றும் 2MP Bokeh கெமரா மிகத் துல்லியமான bokeh புகைப்படங்களில் அதன் பின்புலத்தை மங்கலடையச் செய்து புகைப்படத்தின் பிரதான அம்சத்தை முன்னிலைப்படுத்துகின்றது.


Add new comment

Or log in with...