என்ஜோய் எஞ்சாமி | தினகரன்

என்ஜோய் எஞ்சாமி

'குக்கூ குக்கூ' என்று குருவிகள் கூவுகின்றனவோ இல்லையோ...
பலரின் திறன்பேசிகள் கூவுகின்றன. காரணம்? அண்மையில் வெளியாகிப் பலரின் கவனத்தை ஈர்த்துள்ள "எஞ்சாய் எஞ்சாமி" பாடல்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயண் தயாரிப்பில் வெளியாகியுள்ள அந்தப் பாடலின் காணொளி, YouTubeஇல் இதுவரை சுமார் 55 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது. ஏ. ஆர். ரஹ்மானின் Maajja நிறுவனத்தின் கீழ் அந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. சுயேச்சை இசைக் கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கவும் அவர்களை ஊக்குவிப்பதற்காகவும் அந்த நிறுவனம் துவங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

"எஞ்சாய் எஞ்சாமி" பாடலுக்கு உயிர் கொடுத்தது அதைப் பாடிய பின்னணிப் பாடகி தீ (Dhee). அவர் "ரௌடி பேபி", "காட்டுப் பயலே" ஆகிய பிரபல தமிழ் திரைப்பாடல்களைப் பாடியவர். பாடலை எழுதியவர் சொல்லிசைக் (Rap) கலைஞர் அறிவு.

"எஞ்சாய் எஞ்சாமி" பாடலில் இயற்கையைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவம், முன்னோர்களின் உழைப்பு, இந்தியாவிலுள்ள சமூகப் பிரச்சினைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. பாரம்பரியத் தமிழ் மரபின் அடையாளங்களாகத் திகழும் ஒப்பாரி, குலவை ஆகியவற்றை இளையர்களுக்குப் பிடித்த சொல்லிசையுடன் இணைக்கும் பாடல் இது என்று இணையரசிகர்கள் புகழ்கின்றனர். திரைப்படப் பாடல்களைத் தாண்டி, தனிப் பாடல்கள் மூலமாகவும் தமிழ் மக்களின் மனத்தைக் கவர முடியும் என்பதற்கு இந்தப் பாடல் சான்றாக இருப்பதாக இணையரசிகர்கள் கூறுகின்றனர்.

குக்கூ குக்கூ
தாத்தா தாத்தா களவெட்டி
குக்கூ குக்கூ
பொந்துல யாரு மீன் கொத்தி
குக்கூ குக்கூ
தண்ணியில் ஓடும் தவளக்கி
குக்கூ குக்கூ
கம்பளி பூச்சி தங்கச்சி
அள்ளி மலர்க்கொடி அங்கதமே
ஓட்டரே ஓட்டரே சந்தனமே

முல்லை மலர்க்கொடி முத்தாரமே
எங்கூரு எங்கூரு குத்தாலமே
சுருக்கு பையம்மா
வெத்தலை மட்டையம்மா
சொமந்த கையம்மா
மத்தளம் கோட்டுயம்மா
தாயம்மா தாயம்மா
என்ன பண்ண மாயம்மா
வள்ளியம்மா பேராண்டி
சங்கதியை கூறேண்டி

கண்ணாடியே காணோடி
இந்தர்ரா பேராண்டி
அன்னைக்கிளி அன்னைக்கிளி
அடி ஆலமரக்கிளை வண்ணக்கிளி
நல்லபடி வாழச்சொல்லி இந்த
மண்ணை கொடுத்தானே பூர்வகுடி
கம்மங்கரை காணியெல்லாம்
பாடி திரிஞ்சானே ஆதிக்குடி
நாய் நரி பூனைக்கெல்லாம்
இந்த ஏரிகுளம் கூட சொந்தமடி
Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி
Enjoy எஞ்சாமி

வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி
குக்கூ குக்கூ
முட்டைய போடும் கோழிக்கு
குக்கூ குக்கூ
ஒப்பனை யாரு மயிலுக்கு
குக்கூ குக்கூ
பச்சையை பூசும் பாசிக்கு
குக்கூ குக்கூ
குச்சிய அடுக்குனே கூட்டுக்கு


Add new comment

Or log in with...