நீண்டதூர சொகுசு பஸ் நடத்துனர்களுக்கு கொவிட் விழிப்புணர்வு | தினகரன்

நீண்டதூர சொகுசு பஸ் நடத்துனர்களுக்கு கொவிட் விழிப்புணர்வு

கொவிட் 19 வைரசின் மூன்றாம் அலைத்தாக்கம் வேகமாகப்ப்பரவி வரும் இக்காலகட்டத்தில் நீண்ட தூர சொகுசு பஸ் நடத்துனர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும். நமது பகுதிக்கு வருகைதரும் புது முகங்களை ஊருக்குள் நுழைவதற்கு முன்னர் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எப்.எம் எ. காதர் தலைமையில் இடம்பெற்றது.

இப்பகுதியில் சேவையிலுள்ள சொகுசு பஸ் நடத்துனர்கள், உரிமையாளர்களை எவ்வாறு விழிப்பாக செயல்பட வேண்டும் என்பது தொடர்பாகவே இக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இங்கு விளக்கமளித்த அவர், இக் காலகட்டத்தில் அவர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் . இது விடயத்தில் அசிரத்தை காட்டுமிடத்து ஏற்படக்கூடிய விளைவுகளையும் குறிப்பிட்டார். எதிர்வரும் காலங்களில் பொதுமக்கள் தம்மை பாதுகாக்க மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும், அவர் பொதுமக்களை வேண்டியுள்ளார்.

வெளி ஊர்களிலிருந்து இப்பகுதிக்கு வருவோர் விடயத்தில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

தற்போது பீ சீ ஆர் சோதனைகள் சன நெரிசலுள்ள இடங்களில் நடைபெற்று வருகின்றன. இதனால் சன நடமாடம் குறைந்துள்ளது.

பள்ளிவாசல்களில் கொரோனா சுகாதார விதிமுறை மிகவும் இறுக்கமாக பேணப்படுவதால் அங்கு குறிப்பிட்ட தொகையினரே பள்ளிவாசல்களில் தொழுகைக்காக வருகை தருகின்றனர்.

(அட்டளைச்சேனை குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...