மக்கள் காங்கிரஸ் பதில் தலைவராக சஹீட் நியமனம் | தினகரன்

மக்கள் காங்கிரஸ் பதில் தலைவராக சஹீட் நியமனம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பதில் தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியின் அரசியல் குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. கட்சியின் தலைவரின் அதிகாரங்களும் பதில் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கட்சி தெரிவித்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் ரிஷாட் பதியுதீனும் அவரது சகோதரரும் அண்மையில் கைது செய்யப்பட்டார்கள். சந்தேக நபர்கள் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கட்சி செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

 


Add new comment

Or log in with...