இளம்பரிதி சஞ்சிகை வெளியீடும் கலைஞர் கௌரவிப்பு நிகழ்வும் | தினகரன்

இளம்பரிதி சஞ்சிகை வெளியீடும் கலைஞர் கௌரவிப்பு நிகழ்வும்

வாழைச்சேனை பிரதேச செயலக கலாசார பேரவையின் ஏற்பாட்டில் இளம்பரிதி சஞ்சிகை வெளியீடும் கலைஞர் கௌரவிப்பு நிகழ்வும். பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச கலைஞர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இளம்பரிதி சஞ்சிகையின் முதற்பிரதி பிரதேச செயலாளரினால் உதவிப் பிரதேச செயலாளருக்கு வழங்கி வெளியீடு செய்யப்பட்டது.சஞ்சிகையில் வாழைச்சேனை பிரதேச கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியியலாளர்களின் விபரங்கள் வெளியிடப் ப்பட்டுள்ளது. இதன்போது மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

(படங்கள்,தகவல்:வெல்லாவெளி தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...