பாடசாலைகள், பிரத்தியேக வகுப்புகள், பல்கலைகள் தொடர்ந்தும் மூடல்

பாடசாலைகள், பிரத்தியேக வகுப்புகள், பல்கலைகள் தொடர்ந்தும் மூடல்-Schools-Closed-Till-Until-Further-Notice-GL-Peiris.jpg

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள், பிரத்தியேக வகுப்புகள், பல்கலைக்கழகங்கள் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இதனை அறிவித்துள்ளார்.

கொவிட்-19 பரவல் தணியாத நிலையில், தற்போது குறித்த அனைத்து கல்வி நிறுவனங்களையும் திறக்க முடியாத நிலை காணப்படுவதால், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைக்கு அமைய குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் தினம் தொடர்பில் மீளாய்வு செய்து மீண்டும் அறிவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...