வெளிநாட்டு வாழ் தமிழருக்கான தனி அமைச்சகம் உருவாக்கம் | தினகரன்

வெளிநாட்டு வாழ் தமிழருக்கான தனி அமைச்சகம் உருவாக்கம்

- உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு தலைவர் செல்வகுமார் நன்றி தெரிவிப்பு

தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு. க. ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்கும் இவ்வேளையில் வெளிநாட்டு வாழ் தமிழருக்கு என தனி அமைச்சகத்தை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் புலம்பெயர்ந்த தமிழர்கள் படும் இன்னல்களை கலையும் தமிழர் நலனில் அக்கறை கொள்ளவும் புதிய அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகெங்கும் உள்ள தமிழர்கள் இதயத்தில் நீங்கா இடம்பெற்று சிம்ம சொப்பனமாக மு. க. ஸ்டாலின் விளங்குகிறார். உலக மக்கள் தொகையில் 2% உள்ள ஒரு சமூகம் அதற்காக ஒரு அமைச்சகம் உருவாக்கப்பட்டது இதுவே முதல் தடவை. மேலும் இவ்வமைச்சரவை இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் அனுபவமிக்க மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட அமைச்சர்களாக தென்படுகிறார்கள்.

இதன் மூலம் 54 வருட அரசியல் அனுபவம் அமைச்சரவை பட்டியலில் தெரிகிறது. இந்த சிறப்பான ஒரு அமைச்சகத்தை உருவாக்கியதற்காக உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு நன்றி கூறுகிறது என அவ்வமைப்பின் தலைவர் செல்வகுமார் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...