அமெரிக்காவில் வைரஸ் பரவல் தொடர்ந்து வீழ்ச்சி | தினகரன்

அமெரிக்காவில் வைரஸ் பரவல் தொடர்ந்து வீழ்ச்சி

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துள்ளது. தினசரி வைரஸ் தொற்றுக்கு ஆளாவோர், உயிரிழப்போர் ஆகியோரின் சராசரி எண்ணிக்கை ஜனவரியை விட 80 வீதம் குறைந்துள்ளது. நாடு முழுவதும் நோய் தொற்றுக் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படுகின்றன.

அமெரிக்க மக்கள் தொகையில் சுமார் 30 வீதத்தினருக்கு இரு முறை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

43 வீதத்திற்கும் அதிகமானோர் முதல் தடுப்பூசி போட்டுள்ளதாக, அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் குறிப்பிட்டது.

இருப்பினும், உருமாறிய புதிய வகை வைரஸ் பரவி வருவதால், அமெரிக்கா கூட்டு எதிர்ப்புச் சக்தியை அடைவது கடினம் என்று சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். 


Add new comment

Or log in with...