ஈஸ்வரன் விளையாட்டுக்கழக அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி | தினகரன்

ஈஸ்வரன் விளையாட்டுக்கழக அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி

பண்டார வன்னியன் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டித்தொடரில் ஈஸ்வரன் விளையாட்டுக்கழக அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.அண்மையில் ஈஸ்வரன் விளையாட்டுக் கழக மைதானத்தில்நடைபெற்ற அரையிறுதியாட்டம் ஒன்றில் ஈஸ்வரன்விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து கோல்டன் பிரதர்ஸ் விளை யாட்டுக்கழக அணி மோதிக் கொண்டன. இதில் ஈஸ்வரன் விளையாட் டுக்கழக அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஈஸ்வரன் விளையாட்டுக்கழக அணி சார்பாக சுதா சுகந்தன் ஆகியோர் தலா ஒரு கோலினை பதிவு செய்தனர்.

(யாழ்.விளையாட்டு நிருபர்)


Add new comment

Or log in with...