நவீன பாலின சமத்துவ நிறுவன கட்டமைப்பின் முன்னோடி JAT

மர பூச்சுகளின் உற்பத்திகளின் முன்னோடியாகத் திகழும் JAT Holdings, அதன் பாலின சமத்துவ தலைமைத்துவத்தை பேணும் பொருட்டு தனித்துவம் வாய்ந்த 3 பெண்கள் அதன் உயர் ஆற்றல்மிக்க பணிப்பாளர்கள் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முகாமைத்துவத் தீர்மானங்களின் தரத்தை மேம்படுத்தும் நோக்குடன், பணிப்பாளர் சபையின் கலப்பு பிரதிநிதித்துவம் பல்வேறு முன்னோக்குகள், சிந்தனைகள், நிபுணத்துவம் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது ஆகியவற்றை சிறப்பாகக் கையாள்வதுடன், வர்த்தக உலகில் JAT Holdings நிறுவனத்தை திருப்புமுனையை ஏற்படுத்தும் முன்னோடியாக நிலைநிறுத்துகிறது.

இந்த முன்னுரிமையை தமது பணி இலக்காகக் கொண்டு, வைத்தியர் சிவா செல்லையா, (பணிப்பாளர் சபைத் தலைவர், JAT) மற்றும் ஈலியன் குணவர்த்தன, (முகாமைத்துவப் பணிப்பாளர், JAT) ஆகியோர் அதிகாரத்தில் பெண்கள் கொண்டுள்ள சிறப்பான அனுகூலம் தொடர்பில் ஏகோபித்த உறுதிப்பாட்டுடன் உள்ளனர். மேலும், ஒவ்வொரு நபரின் நிபுணத்துவத்தையும் பயன்படுத்திக் கொள்ளும் தளமேடை, அதிகாரம் மற்றும் படைப்பாற்றல் சுதந்திரம் ஆகியவற்றை அவர்களுக்கு வழங்குவதில், பெண்கள் சமத்துவத்துடன் தங்களது திறமைகளை நிரூபிப்பதற்கு இத்தீர்மானம் வழிவகுக்கும்.

நிறுவன / பிணையங்கள் சட்டத்துறையில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகால நிபுணத்துவத்துடன், இலங்கையின் உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞரான திருமதி பிரியந்தி பீரிஸ் தற்போது LOLC Finance PLC Associated Electrical Corporation Ltd மற்றும் MTN Corporate Consultants (Pvt) Ltd ஆகிய நிறுவனங்களின் பணிப்பாளர் சபை அங்கத்தவராகச் செயற்படுவதுடன், 2004 முதல் 2011 வரை நிதியமைச்சின் சட்ட ஆலோசகராக கடமையாற்றிய பழுத்த அனுபவத்தையும் கொண்டுள்ளார்.


Add new comment

Or log in with...