கனடாவுக்கான உயர் ஸ்தானிகராக சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா? | தினகரன்

கனடாவுக்கான உயர் ஸ்தானிகராக சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா?

கனடாவுக்கான உயர் ஸ்தானிகராக சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா?-AG Thank for President Appointed Him as Canadian High Commissioner

சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா, கனடாவுக்கான உயர் ஸ்தானிகராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமித்துள்ளார்.

ஆயினும், தான் இலங்கையில் தங்கி இந்நாட்டு மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகவும், குறித்த பதவிக்கு தன்னை நியமித்த ஜனாதிபதிக்கு சட்ட மாஅதிபர் நன்றி தெரிவித்துள்ளதாக, அவரது ஒருங்கிணைப்பு அதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

2 வருடங்களில் 27,206 வழக்குகள் நிறைவு
கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் சட்ட மாஅதிபராக நியமிக்கப்பட்டதிலிருந்து, நேற்று வரையான தப்புல டி லிவேராவின் இரண்டு வருட காலப் பகுதியில் 27,206 குற்றவியல் வழக்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...