சவுக்கங்காடு தீயில் எரிந்து நாசம் | தினகரன்

சவுக்கங்காடு தீயில் எரிந்து நாசம்

மணற்காடு சவுக்கங் காட்டில் ஏற்பட்ட பாரிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை (05) அதிகாலை மணற்காடு சவுக்கங்காடு பகுதியில் தீப் பரவல் ஏற்பட்டது. இதனால் இப்பகுதி புகைந்து கொண்டிருந்த நிலையில், இதுபற்றி பிற்பகல் அளவிலேயே மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு தெரியவந்தது. இதனையடுத்து பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினரின் இணைந்து பெரும் சிரமத்துக்கு மத்தியில் மாலை வேளையில் இத் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இத்தீ காரணமாக சுமார் 20 ஏக்கர் சவுக்கங்காடு எரிந்து அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

(நாகர்கோவில் விஷேட நிருபர்)


Add new comment

Or log in with...