வசந்த காலத்தை முன்னிட்டு ஓட்டப் போட்டி

நுவரெலியா 4 * 4 கழகத்தின் ஏற்பாட்டில் நுவரெலியா கிரகரி வாவிக்கு அருகாமைல் நடைபெற்ற ஏப்ரல் வசந்த காலத்தை முன்னிட்டு 4*4 ஜீப் சேற்றில் ஓடும் ஓட்டப் போட்டியில் முதலாம் இடத்தை சுயார திலின பெற்றுக்கொண்டார். இரண்டாம் இடத்தை இந்திக்க சஞ்ஜேயும் மூன்றாம் இடத்தை ரங்க அஹங்கமவும் பெற்றுக்கொண்டனர்.

இந்த போட்டியில் இலங்கையில் பலஇடங்களிலிருந்து 25 போட்டியாளர்கள்

கலந்துக்கொண்டனர். 4*4 கழகத்தின் தலைவர் இசார வீரசிங்க தலைமையிலான

குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுகொண்ட சுயார திலினவிற்கு ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசும் வெற்றிக் கேடயமும் சான்றிதழும் வழங்கப்பட்டன. இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட இந்திக்க சஞ்ஜேவுக்கு 50 ஆயிரம்

ரூபா பணப்பரிசும் வெற்றிக்கேடயமும் சான்றிதலும், மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்ட ரங்க அஹங்கமவிற்கு 25 ஆயிரம் ரூபாவும் வெற்றிக்கேடயமும்

சான்றிதழும் வழங்கப்பட்டன.

இந்த 4*4 ஜீப் ஓட்டப்போட்டியின் பரிசளிப்பு வைபவத்தில் பிரதம அதிதிகளாக நுவரெலியா மாநகர முதல்வர் சந்தன லால் கருணாரட்ன, முன்னாள் நுவரெலியா மாநகர முதல்வரும் தற்போ​ைதய மாநகரசபை உறுப்பினருமான. மஹிந்த தொடம்பே கமகே மற்றும் நுவரெலியா மோட்டார் ரேஸிங் கழகத்தின் தலைவர் உதித்த சமரஜீவ உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துக்கொண்டு வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.

நுவரெலியா தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...