எரிவாயு விலையில் அதிகரிப்பு இல்லை | தினகரன்

எரிவாயு விலையில் அதிகரிப்பு இல்லை

- அமைச்சர் உதயகம்மன்பில

சமையல் எரிவாயு விலையில் மாற்றம் தொடர்பாக எந்தவொரு யோசனையும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று இணை அமைச்சரவை பேச்சாளரும் எரிசக்தி அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படுமா என்று நேற்று அரசு தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்து வருவது உண்மைதான். ஆனால் இதுவரை எரிவாயு விலையை மாற்றுவதற்கு எந்த அமைச்சரவை முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். எரிவாயு விலைகளை அதிகரிக்குமாறு எரிவாயு கம்பனிகள் அரசிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது தெரிந்ததே. (பா)

ஷம்ஸ் பாஹிம் 


Add new comment

Or log in with...