இசை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் முகக்கவசமின்றி பங்கேற்பு

மத்திய சீனாவின் வூஹான் நகரில் ஸ்ட்ரோபர்ரி இசை நிகழ்ச்சியின் முதல் நாளில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அவர்களில் பலர் முகக்கவசம் அணியாமல் நிகழ்ச்சியை ரசித்தனர்.

வெளிப்புறத்தில் இடம்பெறும் அந்த இரண்டு நாள் இசை நிகழ்ச்சி கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு தாமதமானது, பின்னர் ரத்து செய்யப்பட்டது.

இந்த ஆண்டு நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டியிருந்ததாக ஏற்பாட்டாளார்கள் கூறினர்.

5 நாள் தேசிய விடுமுறையை ஒட்டி சீனாவின் மற்ற நகரங்களிலும் இதே போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்தபோது வூஹான் நகரில், உலகின் மிகக் கடுமையான முடக்கம் முதன்முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அங்கு வசிப்பவர்கள் சுமார் 2 மாதங்களுக்கும் மேலாகக் கடுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்றி நடந்தனர். தற்போது, வூஹான் நகர் கிட்டத்தட்ட வைரஸ் பரவல் இல்லாத இடமாக மாறியுள்ளதாக அதிகாரபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Add new comment

Or log in with...