இந்தியாவின் கொரோனா திரிபு இந்தோனேசியாவில் | தினகரன்

இந்தியாவின் கொரோனா திரிபு இந்தோனேசியாவில்

இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் இந்தோனேசியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மிக வேகமாகப் பரவக்கூடிய ஆற்றலைக் கொண்ட அந்த வைரஸ் வகை, தலைநகர் ஜக்கர்த்தாவில் இரண்டு பேரைப் பாதித்துள்ளது. அந்தத் தகவலை அந்நாட்டுச் சுகாதார அமைச்சர் பூடி குணாடி நேற்று தெரிவித்தார்.

தென்னாபிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் பாலியில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்தியாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் கொவிட்–19 நோய்த்தொற்று காரணமாக அந்நாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்தோனேசியா தடை விதித்துள்ளது.

இதன்படி முந்திய 14 நாட்களில் இந்தியாவில் இருந்த வெளிநாட்டினருக்கு விசா வழங்குவதை இந்தோனேசியா கடந்த வாரம் நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...