மியன்மார் போராட்டக்காரர் எட்டுப் பேர் சுட்டுக்கொலை | தினகரன்

மியன்மார் போராட்டக்காரர் எட்டுப் பேர் சுட்டுக்கொலை

மியன்மாரில் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக அண்மைய நாட்களில் இடம்பெற்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் குறைந்தது எட்டுப் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிறுநகரங்கள் மற்றும் நகரங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர். நாட்டின் இரண்டாவது பெரிய நகரான மன்டாலாயில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக மசிமா செய்தி நிறுவனம் தெரிவித்தது. மத்திய நகரான வெட்லட்டில் மூன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. வடக்கு நகரான ஹப்கன்டில் மேலும் ஒரு ஆர்ப்பாட்டக்காரர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி முதலாம் திகதி ஆங் சான் சூச்சியின் அரசை கவிழ்த்து இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது தொடக்கம் சிவில் ஒத்திழையாமை போராட்டங்கள் மற்றும் பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.


Add new comment

Or log in with...