அகில இலங்கை சமர் சீஸன் பெட்மின்டன் போட்டி | தினகரன்

அகில இலங்கை சமர் சீஸன் பெட்மின்டன் போட்டி

இலங்கை பெட்மின்டன் சங்கத்தின் அனுசரணையுடன் மத்திய மாகாண பெட்மின்டன் சங்கமும் நுவரெலியா பெட்மின்டன் சங்கமும் இணைந்து நுவரெலியா மாநகரபை விளையாட்டு உள்ளரங்கில் நடத்திய “ சமர் சீஸன் பெட்மின்டன் “ போட்டி அகில இலங்கை ரீதியில் நடைபெற்றது.

இப் போட்டியில் 13, 15, 17, 19 வயதிற்கு கீழ்பட்டவர்களுக்கான போட்டிகளும் 35 , 40,45, 50, 55, 60, 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான போட்டிகளும் திரந்த போட்டிகளும் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் அகில இலங்கையிலிருந்து 1200 வீரர்கள் கலந்துக்கொண்டனர்.

இதில் ஆண்களுக்கான திரந்த போட்டியின் இறுதிப்போட்டியில் 10-21, 21-19,21-19 புள்ளியடிப்படையில் மூன்று சுற்றில் இரண்டு சுற்றில் வெற்றிப்பெற்று ரன்சுக்கா கருணாதிலக்க முதலாம் இடத்தையும் இவரைஎதிர்த்துபோட்டியிட்ட புவனக்க குணதிலக்க ஒரு சுற்றில் மாத்திரம் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தை பெற்றார்.

பெண்களுக்கான திரந்த போட்டியின் இறுதிப்போட்டியில் 21-10, 21-15, புள்ளியடிப் படையில் இரண்டு சுற்றில் வெற்றிப்பெற்ற டில்மி டயஸ் முதலாம் இடத்தையும் இவரை எதிர்த்து போட்டியிட்ட ரணித்மா லியணகே இரண்டாம் இடத்தை பெற்றனர்.

ஆண்களுகான இரட்டையர் திரந்த போட்டியில் 21-10, 21-12, புள்ளியடிப்படையில் தொடர்ந்து இரண்டு சுற்றில் வெற்றிப்பெற்ற புவனக்க குணதிலக்கவும் ரன்ஸ்சுக்கா ககருணாதிலக்கவும் முதலாம் இடத்தை பெற்றனர். இவர்களை எதிர்த்து போட்டியிட்ட அஸித்த ஜானக்கவும் கிலரன்ஸ் ஓமாவும் இரண்டாம் இடத்தை பெற்றனர்.,

பெண்களுக்கான இரட்டையர் திரந்த போட்டியில் 21--9, 21---15, புள்ளிகள்அடிப்படையில் தொடர்ந்து இரண்டு சுற்றில் வெற்றிப்பெற்ற கவிந்திக்க டீ சில்வாவும் டில்மி டயஸ்ஸும் முதலாம் இடத்தையும் இவர்களை எதிர்த்து போட்டியிட்ட புத்மி கலகமகேயும் நசிராஹா கயான்தியும் இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.

ஆண் பெண் இரட்டையர் திறந்த போட்டியில் ருவானேக்க குணதிலக்கவும் நதூஸா கயன்த்தியும் முதலாம் இடத்தையும் இவர்களை எதிர்த்து போட்டியிட்ட லயிரு வீரதுங்கவும் மதுஸ்கா டில்ருக்காசியும் பெற்றனர்.

நுவரெலியா மற்றும் மத்திய மாகாண பெட்மின்டன் சங்கங்களின் தலைவரும் முன்னாள் நுவரெலியா மாநகரசபை முதல்வரும் தற்போதய உறுப்பினருமான மஹிந்த தொடம்பே கமகே தலைமையில் நடைபெற்ற இப் போட்டியின் பரிசளிப்பு வைபவத்தில் கலந்துக்கொண்ட நுவரெலியா மாநகர முதல்வர் சந்தன லால் கருணாரட்ன, இலங்கை பெட்மின்டன் சங்கத்தின் தலைவர் ரொஹான் டீ சில்வா, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர். இராஜாராம், நுவரெலியா பெட்மின்டன் சங்கத்தின் பொதுச் செயலாளர் பாலித்த ஹெட்டியாராச்சி, பொருளாளர் தம்மிக்க வணிகசேக்கர, மத்திய மாகாண பெட்மின்டன் சங்கத்தின்பொதுச்செயலாளர் சாமர அலுத்கே, நுவரெலியா மாநகர பிரதி முதல்வர் யதர்சனா புத்திரசிகாமணி ஆகியோர் வெற்றிப்பெற்றவர்களுக்கானபரிசுகளை வழங்கினார்கள்.

நுவரெலியா தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...