20 வருடங்களுக்கு பின்னர் பூத்த நான்கு தாமரைகள்

தமிழ்நாட்டில் தாமரை 4 தொகுதிகளில் மலர்ந்துள்ளது.. இது யாருமே எதிர்பாராத ஒன்று. தமிழக பா.ஜ.கவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது. ஆனாலும் இந்த வெற்றிக்கான விதையை போட்டவரை பா.ஜ.க மறந்து விட முடியாது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க, ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என்று தேர்தலுக்கு முந்திய கருத்து கணிப்புகள் கூறின. இதுதான் வாக்குப்பதிவு அன்றைய தினமும் சொல்லப்பட்டது. இதையேதான் கருத்துக் கணிப்புகளும் கூறின.

ஆனால், பா.ஜ.கவின் 4 தொகுதி வெற்றியானது பேசுபொருளாக உருவெடுத்துள்ளது. இதற்கு காரணம், 20 வருடமாக ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாத கட்சி அது. வாக்கு வங்கியை கூட நிலையாக வைத்திருக்காத கட்சி. தமிழகத்தில் 2 சதவீத வாக்கு வங்கி இல்லாத தேசியக் கட்சி.

ஆனால், கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன், திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன், நாகர்கோவில் தொகுதியில் எம்.ஆர்.காந்தி, மொடக்குறிச்சி தொகுதியில் சி.கே.சரஸ்வதி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். ஒரு தேசிய கட்சியாக இருந்தாலும், திராவிட கட்சிகளின் முதுகில் சவாரி செய்தே தேர்தலை சந்திக்க வேண்டிய சூழலில் பா.ஜ.க உள்ளது.

திராவிட கட்சிகளுக்கு மாற்று தாங்கள்தான் என்று பா.ஜ.க சொன்னாலும், திராவிட கட்சிகளை பகைத்து கொண்டு தமிழகத்தில் காலூன்ற முடியாத நிலைமைதான் ஏற்பட்டுள்ளது. அதேசமயம், எங்கோ அடிபாதாளத்தில் தொங்கி கொண்டிருந்த பா.ஜ.கவை, தமிழகம் முழுக்க கொண்டு போய் சேர்த்த பெருமை டொக்டர் தமிழிசை சவுந்தராஜனையே சாரும். தமிழக பா.ஜ.கவுக்கு தமிழிசை செய்த பணிகள் அளப்பரியன.

தனிநபர் விமர்சனங்கள் தமிழிசை மீது வீசப்பட்டன. அனைத்தையும் அன்று இன்முகத்துடன் ஏற்று கொண்டவர் தமிழிசை. இந்த அளவுக்கு பக்குவத்துடனும், சகிப்புத்தன்மையுடனும் மகளை வளர்த்த பெருமை குமரி அனந்தனை சேரும்.​ை "தாமரை மலர்ந்தே தீரும்" என்ற வாசகத்தை ஒவ்வொரு தெருக்களிலும் போய் ஒப்படைத்தது தமிழிசைதான்.


Add new comment

Or log in with...