2020 A/L பெறுபேறுகள் இணையத்தில் வெளியாகின

2020 A/L பெறுபேறுகள் இணையத்தில் வெளியாகின-2020 GCE AL Results Released

194,297 மாணவர்கள் பல்கலைக்கு தகுதி
- 86 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்
- மீளாய்வுக்கு விண்ணப்பித்தல் பின்னர் அறிவிக்கப்படும்

2020 க.பொ.த. உயர் தர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் (04) இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

பெறுபேறுகளை, www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk அல்லது exams.gov.lk எனும் பரீட்சை திணைக்களத்தின் இணையத்தில் இலவசமாக அறிந்துகொள்ள முடியும்.

க.பொ.த. உயர் தரப் பரீட்சைகள் கடந்த வருடம் ஒக்டோபர் 22ஆம் திகதி முதல் நவம்பர் 06ஆம் திகதி வரை இடம்பெற்றது.

பரீட்சார்த்திகள்
நாடு முழுவதிலுமுள்ள 2,648 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்ற இப்பரீட்சைகளுக்கு, 301,771 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பாடத்திட்டம்: 277,625 பேர்
பழைய பாடத்திட்டம்: 24,146 பேர்

64.39% ஆனோர் பல்கலைக்கழக தகுதி
2020 க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 194,297 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

புதிய பாடத்திட்டம்: 178,337 பேர்
பழைய பாடத்திட்டம்: 15,960 பேர்

அதற்கமைய, பரீட்சைக்கு தோற்றிய 64.39% ஆன மாணவர்கள் பல்கலைக்கு தகுதி பெற்றுள்ளதாக, திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

பெறுபேறுகள் இடைநிறுத்தம்
இதேவேளை 86 மாணவர்களின் பெறுபேறுகள் வெளியிடப்படாமல் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய பாடத்திட்டம்: 72 பேர்
பழைய பாடத்திட்டம்: 14 பேர்

பெறுபேறுகளை தரவிறக்கம் செய்தல்
அனைத்து பாடசாலைகளின் அதிபர்களும், விண்ணப்பங்களை அனுப்பும்போது, ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (User Name), கடவுச்சொல் (Password) மூலம், உரிய பாடசாலையின் பெறுபேறுகளை தரவிறக்கி பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், அனைத்து மாகாண மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் இது தொடர்பான பயனர்பெயர் (User Name) மற்றும் கடவுச்சொல் (Password) மூலம் குறித்த மாகாண மற்றும் வலய பெறுபேறுகளை தரவிறக்கம் செய்து பெற்றுள் கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளினதும் பேறுபேறகள், எதிர்வரும் நாட்களில் அந்தந்த பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கல்வி நடவடிக்கைகளுக்காக பெறுபேற்று சான்றிதழ்கள் விநியோகிப்பது தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெறுபேறுகளின் மீளாய்வு
க.பொ.த. (உ/த) பரீட்சை மீளாய்வுக்கான விண்ணப்பம் தொடர்பில் விரைவில், தேசிய பத்திரிகைகளில் அறிவிக்கப்படுமென, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

பெறுபேறுகள் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு
011 278 4208
011 278 4537
011 3188 350
011 314 0314
இலக்கங்களை தொடர்பு கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான உடனடி அழைப்புக்கு 1911

பெறுபேறுகளை பெற

G.C.E. (A/L) EXAMINATION

 
 
 
PDF File: 

Add new comment

Or log in with...