தேவைக்கதிகமான ஒக்ஸிஜன் கையிருப்பில்: மக்கள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை | தினகரன்

தேவைக்கதிகமான ஒக்ஸிஜன் கையிருப்பில்: மக்கள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை

நாட்டில் தேவைக்கு அதிமானளவு ஒக்ஸிஜன் இருப்பதால் இதுகுறித்து யாரும் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லை என,மின்சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

மாத்தறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற (01) கொவிட்-19 விழிப்புணர்வுக் கூட்டத்தில் பேசுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் கருத்துரைத்த அமைச்சர்:

சுகாதார அமைச்சுக்கு நாளாந்தம் 2200 லீற்றர் ஒக்ஸிஜன் தேவைப்படுகிறது. எமதுநாட்டில் ஒக்ஸிஜன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இரண்டு நிறுவனங்களும் நாளாந்தம் 67000 லீற்றர் ஒக்ஸிஜனை உற்பத்தி செய்கின்றன. எமது நாட்டுக்கு அவசர தேவைக்காக ஒக்ஸிஜன் தேவையானால் சிங்கப்பூரிலிருந்து ஒக்ஸிஜனை கொள்வனவு செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.நாட்டில் பதினையாயிரம் ஜம்போசிலின்டர் ஒக்ஸிஜன் கையிருப்பிலிருக்கிறது. மாத்தறை மாவட்டத்து நோயாளர்களுக்கு மாத்தறை, கம்புறுகமுவ உட்பட ஆறு அஸ்பத்திரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேவையேற்படின்  மூடப்பட்டுள்ள ஆடைத் தொழிற்சாலையையும் மிகவிரைவில் இதற்காகப் யன்படுத்த முடியுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மாத்தறை தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...