ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பினார் எடப்பாடி பழனிசாமி | தினகரன்

ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பினார் எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பினார்.

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. தனிப் பெரும்பான்மையாக வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி அமைக்க உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைய உள்ள ஆட்சிக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக கூட்டணி 75 இடங்களில் மட்டும் வென்று தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பியுள்ளார்.


Add new comment

Or log in with...