ஒட்சிசன் தட்டுப்பாட்டால் புதுடில்லி, கர்நாடகாவில் 32 பேர் மரணம் | தினகரன்

ஒட்சிசன் தட்டுப்பாட்டால் புதுடில்லி, கர்நாடகாவில் 32 பேர் மரணம்

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை தீவிர பாதிப்புக்களை ஏற்படுத்தி வருவதால்,நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்குத் தேவையான ஒட்சி​ேனுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்நிலையில்,நேற்று முன்தினம் தலைநகர் டில்லியில் உள்ள பத்ரா மருத்துவமனையில் திடீரென ஒட்சிசனுக்குத் தட்டுப்பாடு நிலவியதில் எட்டுப் பேர் உயிரிழந்தனர்.

தொடர்ந்தும் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான படுக்கைகள் மற்றும் ஒட்சிசன் என்பவற்றுக்கு கடுமையான தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதால் அழுத்தங்களும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான தட்டுப்பாடுகள், கவலை தரும் மரணங்களையும் ஏற்படுத்துகின்றன. மேலும் கர்நாடகா மாநிலத்திலும் ஒட்சிசன் பற்றாக்குறையால் 24 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவ்வாறு நிகழும் மரணங்கள் குறித்து விரிவான விசாரணைகள் நடத்துமாறும், மருத்துவ ஆய்வு அறிக்கைகள் சமர்ப்பிக்கும்படியும் அதிகாரிகள் கோரியுள்ளனர்.

இவ்வாறு இறந்தவர்களின் மருத்துவ ஆய்வு அறிக்கைக்காக காத்திருப்பதாக மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். ஒட்சிசன்களுக்கு செயற்கையாகவே தட்டுப்பாடு ஏற்படுத்தும் இரகசிய நடவடிக்கைகள் இடம்பெறுகிறதா எனவும் ஆராயுமாறு அதிகாரிகள் பணிக்கப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...