மேலும் சில இடங்களுக்குள் பொதுமக்கள் நுழைவது தற்காலிக இடைநிறுத்தம் | தினகரன்

மேலும் சில இடங்களுக்குள் பொதுமக்கள் நுழைவது தற்காலிக இடைநிறுத்தம்

மேலும் சில இடங்களுக்குள் பொதுமக்கள் நுழைவது தற்காலிக இடைநிறுத்தம்-COVID19-Department-of-Labour-National-Parks-and-Zoo-Closed-Until-Further-Notice

கொவிட்-19 பரவலைத் தொடர்ந்து, அதன் பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரச நிறுவனங்களில் பொதுமக்கள் தொடர்புறுவதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், மறு அறிவித்தல் வரை தொழில் திணைக்களத்திற்கு பொதுமக்கள் வருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக, திணைக்களம் அறிவித்துள்ளது.

அந்த வகையில், திணைக்களத்தின் பிரதான அலுவலகம், மாகாண, மாவட்ட அலுவலகங்களில் பொதுமக்கள் வருவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், ஊழியர் சேமலாப நிதியம் பெறுவது தொடர்பிலான சேவையைப் பெறுவதற்கு, பின்வரும் இணைப்பின் ஊடாக நேரமொன்றை ஒதுக்கிக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.labourdept.gov.lk/index.php?option=com_content&view=article&id=351&lang=en

மிருகக்காட்சிசாலைகள், சரணாலயங்களுக்கும் பூட்டு

இதேவேளை, தேசிய  மிருகக் காட்சிசாலை திணைக்களம், சரணாலயங்கள் திணைக்களம், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம், வனப் பாதுகாப்பு திணைக்களம் ஆகிய திணைக்களங்களின் கீழுள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் அனைத்து நிறுவனங்களும், மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நாளை (04) முதல் தெஹிவளை மிருகக் காட்சிசாலை, பின்னவல யானைகள் சரணாலயம் பின்னவல மிருகக் காட்சிசாலை, ரிதியகம சபாரி பூங்கா உள்ளிட்ட அனைத்து பூங்காக்களும் இவ்வாறு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 2ஆம் அலையைத் தொடர்ந்து மூடப்பட்ட அனைத்து மிருகக்காட்சிசாலைகளும் கடந்த பெப்ரவரி மாதம் 01ஆம் திகதி திறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

PDF File: 

Add new comment

Or log in with...