பழமையான கட்டடத்தின் 80 வருட பூர்த்தியை கொண்டாடுகின்றது Baurs | தினகரன்

பழமையான கட்டடத்தின் 80 வருட பூர்த்தியை கொண்டாடுகின்றது Baurs

கொழும்பு கோட்டையில் மேல் சத்தாம் வீதியில் அமைந்துள்ள பழமையான Baurs கட்டடம், கொழும்பில் காணப்படும் உறுதியான மற்றும் நீண்ட காலமாக நிலைத்திருக்கும் கூட்டாண்மை கட்டங்களில் ஒன்றாக திகழ்கின்றது. இந்தக் கட்டடம் 80வருடப் பூர்த்தியைக் கொண்டாடியதுடன், அதனைக் குறிக்கும் வகையில் முன் அலுவலகப் பகுதி சுவிஸ் பெறுமதிகளைக் குறிக்கும் வகையில் நவீன வசதிகளைக் கொண்டு மெருகேற்றப்பட்டிருந்தது.

இந்த கண்கவர், புகழ்பெற்ற கட்டமைப்பில் இலங்கையின் முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட வியாபாரக் குழுமமான A. Baur & Company Ltd இன் தலைமையகம் அமைந்துள்ளது. 1897ஆம் ஆண்டு சுவிஸ் நாட்டவரான அல்பிரட் பவர் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது முதல், சுவிஸ் நாட்டின் பாரம்பரியத்துக்கமைய நிறுவனத்தின் கொள்கைகள், பெறுமதிக் கட்டமைப்புகள் மற்றும் கலாசாரம் போன்றன ஆழமாக ஊடுருவியுள்ளன.

1941ஆம் ஆண்டு கொழும்பில் நிறுவப்பட்ட Baurs கட்டடம், கொழும்பில் முதன் முறையாக நிறுவப்பட்ட தாக்கங்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய கட்டடமாக அமைந்துள்ளது. கடற்படை தலைமையக வளாகத்தினுள் பாதுகாப்பாக அமைந்துள்ளது. இதுவரையில் பத்து முகாமைத்துவ பணிப்பாளர்கள் இதுவரை கடமையாற்றியுள்ளதுடன், இதில் ஒன்பது பேர் சுவிஸ் நாட்டவர்களாவர், அண்மையில் நியமனம் பெற்ற புகழ்பெற்ற இலங்கையின் வியாபார பிரமுகரான லக்ஷ்மன் நியன்கொட தற்போது நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரமற்ற தவிசாளராக பணியாற்றுகின்றார்.

லக்ஷ்மன் கருத்துத் தெரிவிக்கையில், “Baurs பயணத்தில் இந்த ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. கொழும்பில் அமைந்துள்ள எமது கட்டடம் 80வருட பூர்த்தியைக் கொண்டாடுகின்றது. எமது சகல திட்டங்கள், பிரார்த்தனைகள் மற்றும் அதீத ஈடுபாடுகளை இந்தக் கட்டடத்தின் சுவர்கள் நன்கறியும். இந்த கட்டடத்துடன் நாம் அதிகளவு உணர்வுபூர்வமான இணைப்பையும் கொண்டுள்ளோம். ” என்றார்.


Add new comment

Or log in with...