பேஸ்புக் இலாபம் இரட்டிப்பானது | தினகரன்

பேஸ்புக் இலாபம் இரட்டிப்பானது

பேஸ்புக் நிறுவனத்தின் இலாபம், அண்மைக் காலாண்டில் கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது. அது 9.5 பில்லியன் டொலர் இலாபத்தை ஈட்டியுள்ளதாகத் தெரிவித்தது.

கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் அதிகமானோர் இணையத்தைப் பயன்படுத்தியதால், மின்னிலக்க விளம்பரங்கள் மூலம் நிறுவனம் அதிக இலாபம் பெற்றுள்ளது.

பேஸ்புக் ஒரு வலுவான காலாண்டைக் கண்டுள்ளதாகவும், மக்கள் தொடர்ந்து இணைந்திருக்கவும் வர்த்தகங்கள் வளரவும் உதவியுள்ளதாகவும் அதன் தலைவர் மார்க் ஸக்கர்பர்க் வருவாய் வெளியீடு ஒன்றில் தெரிவித்தார்.

நிறுவனம், இணைய விளம்பரங்கள் மூலம் பெற்ற வருவாய் 25.4 பில்லியன் டொலரை எட்டியது. முந்தைய ஆண்டின் அதே காலாண்டுடன் ஒப்பிட்டுகையில் அது 46 வீதம் அதிகம்.

பேஸ்புக்கை மாதந்தோறும் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 2.85 பில்லியனாக உயர்ந்துள்ளது. அது 10 வீத அதிகரிப்பாகும்.


Add new comment

Or log in with...