தேசிய சேமிப்பு வங்கி; கொவிட்19 நெருக்கடிக்கு மத்தியில் கடந்த ஆண்டு ரூ.15 பில். இலாபம் | தினகரன்

தேசிய சேமிப்பு வங்கி; கொவிட்19 நெருக்கடிக்கு மத்தியில் கடந்த ஆண்டு ரூ.15 பில். இலாபம்

- தலைவர் கேசல ஜயவர்தன

கொவிட்19நெருக்கடிக்கு மத்தியில் வரிச் செலுத்துவதற்கு முன்னதாக கடந்த ஆண்டு தேசிய சேமிப்பு வங்கி  15பில்லியன் ரூபாய் இலாபத்தை பெற்றுள்ளதாக வங்கியின் தலைவர் கேசல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

 49வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்த தேசிய சேமிப்பு வங்கி, கடந்த வருடம் போன்று வரிச் செலுத்தலுக்கு முன்னர் இவ்வாறு பாரிய இலாபத்தை பெற்றிருக்வில்லை. வரிச் செலுத்தலுக்கு பின்னர் மொத்தமாக 10.5பில்லியன் இலாபத்தை தேசிய மேசிப்பு வங்கி பெற்றுள்ளது. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனையின் பிரகாரம் அவரது ‘சுபிட்சத்தின் நோக்கை’ அடைந்துக்கொள்வதற்கான பின்புலத்தை உருவாக்கிக் கொடுப்பது வங்கிகளின் பணியாகும். நாட்டின் பொது மக்களின் தேவையை கருத்தி வினைத்திறன் வாய்ந்த சேவையை எமது மக்களுக்கு வழங்கி வருகிறோம். 

உலகளாவிய கொவிட் தொற்றுக்காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் வர்த்தகர்களுக்கு கைகொடுக்கவும் நாம் எதிர்பார்க்கிறோம். ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய 04 இற்கும் 09 சதவீதத்திற்கும் இடைப்பட்ட வட்டி சதவீதத்தில் வர்த்தகர்களுக்கு கடன்களை பெற்றுகொடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

சுப்பிரமணியம் நிசாந்தன்  

 


Add new comment

Or log in with...