அமானா வங்கி சிறுவர் கணக்குகளுக்கு வருட இறுதி போனஸ்

மாதாந்த நிலையான கட்டளை ஒன்றினூடாக சிறுவர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை பெற்றோர்கள் ஊக்குவிப்பதை வரவேற்கும் வகையில், 2020ஆம் ஆண்டில் கணக்கை சீராக பேணியிருந்தமைக்கு அமைவாக, தகைமை பெற்றிருந்த சிறுவர் சேமிப்புக் கணக்குகளுக்கு அமானா வங்கி வருட இறுதி போனஸ் கொடுப்பனவை வழங்கியுள்ளது.  

நிலையான கட்டளை போனஸ் ஊக்குவிப்புத் திட்டத்தை கடந்த ஆண்டு அறிமுகம் செய்திருந்த நிலையில், தமது பெற்றோரின் அல்லது பாதுகாவலரின் கணக்கிலிருந்து ஆகக்குறைந்தது தொடர்ச்சியான பத்து மாதாந்த நிலையான கட்டளைகளினூடாக கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொண்ட 2000க்கும் அதிகமான சிறுவர் சேமிப்புக் கணக்குதாரர்களுக்கு அவர்களின் நிலையான கட்டளைப் பெறுமதித் தொகைக்கு நிகரான ரூ. 2000வரையான தொகை போனஸ் கொடுப்பனவாக வழங்கப்பட்டிருந்தது. 

சிறுவர் சேமிப்பு போனஸ் கொடுப்பனவுத் திட்டம் தொடர்பில் வங்கியின் வைப்புகள் பிரிவின் தலைமை அதிகாரி அர்ஷாத் ஜமால்தீன் கருத்துத் தெரிவிக்கையில், “பலருக்கு நிதியியல் ரீதியில் பெருமளவு சவால்கள் காணப்பட்ட போதிலும், தமது பிள்ளைகளின் கணக்குக்கான மாதாந்த நிலையான கட்டளைகள் செயலில் இருப்பதை எமது வாடிக்கையாளர்கள் உறுதி செய்திருந்தனர்.

அவ்வாறான பெற்றோருக்கு வருட இறுதி போனஸ் கொடுப்பனவை அவர்களின் பிள்ளைகளுக்காக வழங்கி அவர்களின் முயற்சியை வரவேற்று ஊக்குவிப்பது முக்கியமானது என நாம் கருதுகின்றோம்.

கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட திட்டத்தின் வெற்றிகரத் தன்மையைத் தொடர்ந்து, பெற்றோர்களை தமது பிள்ளைகளுக்காக சேமிப்பதை மேலும் ஊக்குவிக்கும் வகையில், 2021ஆம் ஆண்டுக்கான நிலையான கட்டளை போனஸ் ஊக்குவிப்புத் திட்டத்துக்கான ஆகக்கூடிய போனஸ் பெறுமதியை 5மடங்கினால் வங்கி அதிகரித்து ரூ. 10000ஆக்கியுள்ளது என்பதை அறியத்தருவதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன” என்றார்.  

ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்கு நிலையான கட்டளையை நிறுவிக் கொள்வதற்கு அல்லது ஏற்கனவே காணப்படும் நிலையான கட்டளைப் பெறுமதியை அதிகரிப்பதற்கு, இலகுவாக வங்கியின் இணைய வலையமைப்பு மூலம் தகவல் அனுப்புவதனூடாக அல்லது bit.ly/AmanaCSO எனும் வலயத்தளத்திலுடாக இணைந்து கொள்ளலாம்.


Add new comment

Or log in with...