ரஷ்மிகா மந்தனாவுக்கா இந்த நிலை | தினகரன்

ரஷ்மிகா மந்தனாவுக்கா இந்த நிலை

இந்திய ரசிகர்களின் கனவுக்கன்னி என்ற பட்டத்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் ரஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna)வுக்கு இப்படி ஒரு நிலைமை வரும் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு பங்கம் செய்து வைத்துள்ளனர்.

கன்னட சினிமாவில் அறிமுகமாகி பின்னர் தெலுங்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ரஷ்மிகா மந்தனா தற்போது தமிழிலும் சுல்தான் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்து விட்டார். இனி அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் எதிர்பார்க்கலாம்.

ரஷ்மிகா மந்தனா தற்போது தென்னிந்திய சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் தடம் பதிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அதுவும் ​ெபாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன்.

இப்படி நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு கொண்டிருக்கும் ரஷ்மிகா மந்தனாவை மொட்டை போட்டு ஜிமிக்கி கம்மல் போட்டுவிட்டு விளம்பரத்திற்கு பயன்படுத்தியுள்ளது ரசிகர்களிடையே கிச்சு கிச்சு மூட்டியுள்ளது.

ஒரு சலூன் கடையில் ரஷ்மிகா மந்தனாவுக்கு மொட்டையடித்தபடி பேனர் வைத்து தங்களுடைய விளம்பரத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். இதைப்பார்த்த நெட்டிசன் ஒருவர் மீம்ஸ் போட்டுள்ளார்.


Add new comment

Or log in with...