முடக்கநிலைக்கு மத்தியில் கூகுள் வருவாய் அதிகரிப்பு

கொரோனா தொற்றினால் அதிகமானவர்கள் வீடுகளில் தங்கி இருந்த நிலையில் பலரும் கூகுள் சேவைகளை அதிகம் பயன்படுத்தியதால் அதன் உரிமை நிறுவனமான அல்பபட்டின் வருவாய் கடந்த காலாண்டில் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் வரையான மூன்று மாதங்களில் விளம்பரத்தின் மூலமான வருமானம் மூன்றில் ஒரு பங்காக அதிகரித்த நிலையில் நிகர லாபம் 162 வீதமாக உயர்ந்து 17.9 பில்லியன் டொலர் வருவாயை அது ஈட்டியுள்ளது.

பெருந்தொற்றினால் மக்கள் இணையதளத்தை எப்போதும் இல்லாத அளவுக்கு பயன்படுத்திய நிலையில் இந்த தொழில்நுட்ப நிறுவனத்தின் செல்வாக்கும் அதிகரித்திருப்பதை இது காட்டுகிறது. “கடந்த ஆண்டில் மக்கள் தகவல்கள் பெற, தொடர்பை ஏற்படுத்த மற்றும் பொழுதுபோக்கிற்கு கூகுள் சேர்ச் மற்றும் மேலும் பல ஒன்லைன் சேவைகளை நாடியிருந்தனர்” என்று அல்பபட் மற்றும் கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஒன்லைன் விளம்பரங்களுக்கு அதிகம் செலவிடத் தூண்டி இருக்கும் சூழலில், முடக்க நிலையில் இருந்து திரும்பியபோதும் கூட உலகெங்கும் கூகுளின் பொருளாதாரத் திறன் தொடர்ந்து நீடிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Add new comment

Or log in with...