ஜும்ஆ, தராவீஹ் உள்ளிட்ட தொழுகைகள் தற்காலிமாக இடைநிறுத்தம்

ஜும்ஆ, தராவீஹ் உள்ளிட்ட தொழுகைகள் தற்காலிமாக இடைநிறுத்தம்-Jumma & Taraweeh Prayers Suspended Until Further Notice

- ஐவேளை தொழுகைகளுக்கு மாத்திரம் அனுமதி
- உச்சபட்சம் 25 பேர்

மறு அறிவித்தல் வரை வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகை, நோன்பு கால இரவு நேர தராவீஹ் தொழுகைகளை நடாத்துவது இடைநிறுத்தப்படுவதாக, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொவிட்-19 பரவலை கருத்திற் கொண்டு, சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய, இலங்கை வக்பு சபையினால் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள சுற்றிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஐவேளை தொழுகைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், எந்தவொரு பள்ளிவாசலிலும் ஒரே நேரத்தில் உச்சபட்சம் 25 பேருக்கு உட்பட்டு ஐவேளை தொழுகைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை வருமாறு...

PDF File: 

Add new comment

Or log in with...