கொழும்பில் மூன்று கலை நிகழ்வுகள்..! | தினகரன்

கொழும்பில் மூன்று கலை நிகழ்வுகள்..!

சிலோன் யுனைட்டெட் ஆட்ஸ் ஸ்ரேஜ் அமைப்பின் ஸ்தாபகரும் பிரபலமான நாடக இயக்குனருமான கே.செல்வராஜ் எழுதி வெளியிட்ட ‘கொழும்பு கொட்டாஞ்சேனை நாடகப் பாரம்பரியம்’ என்ற நூலின் அறிமுகவிழா எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி மாலை 4.30 மணிக்கு கொழும்பு-14இல் அமைந்துள்ள ஸ்ரீ நாராயணகுரு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மேல்மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.ரி.குருசாமி நிகழ்விற்கு தலைமை ஏற்கின்றார். ஸ்ரீரெங்கதாஸ் விஜயானந்த் குருசுவாமி அருளாசி வழங்குகிறார், கலைஞர் கலைச்செல்வன் மற்றும் புதிய அலை கலை வட்டத்தின் நிறுவனர் ராதாமேத்தா ஆகியோர் நூல் ஆய்வுரைகளை வழங்குகின்றனர்.

இந்த நிகழ்வின் மற்றிரு அம்சங்களாக டவர் மண்டப அரங்கம் மன்றம் நடத்திய நாடகவிழாவில் மேடை ஏற்றப்பட்ட ‘சந்தேகக் கனவுகள்’ சமூக நாடகத்தில் நடித்த கலைஞர்களுக்குப் பாராட்டுவிழாவும், எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி மருதானை டவர் அரங்கில் மேடையேறவுள்ள ‘துள்ளுவதே இளமை’ என்ற நாடகத்தின் ஆரம்ப விழாவும் நடைபெறவுள்ளன.


Add new comment

Or log in with...