கொவிட் ஆரம்பநிலை தொற்றுக்கு கைகொடுக்கும் சித்த ஆயுர்வேதம் | தினகரன்

கொவிட் ஆரம்பநிலை தொற்றுக்கு கைகொடுக்கும் சித்த ஆயுர்வேதம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த அபெக்ஸ் நிறுவனத்தின் நோயெதிர்ப்பு சக்தி கொண்ட கிளேவேரா மாத்திரைகள் கடந்த நான்கு ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்தன. கடந்த ஆண்டு கொரோனா பேரிடர் காலத்தில் அரசு ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் நோய் தொற்று உள்ளவர்களுக்கு இம்மருந்தை வழங்கி தீர்வு கண்டது.

அதனடிப்படையில் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையின் பரிந்துரையின் பேரில் ICMR மற்றும் ஆயுஷ் அமைச்சகம் ஆரம்பகட்ட கொவிட் மற்றும் மிதமான கோவிட் உள்ளவர்கள் இதனைப் பயன்படுத்தலாம் என அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக அபெக்ஸ் நிறுவன குழுமத்தின் இயக்குனர்கள் சுபாஷினி வணங்காமுடி மற்றும் விசாகன் வணங்காமுடி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் பல்வேறு சந்தேக கேள்விகளுக்கு விடையளித்தனர்.

இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயன்படும் வகையில் இம்மருந்து பயனளிக்கும் என சித்த மருத்துவர் சதீஷ், ஆயுர்வேத மருத்துவர் தர்மேஷ் குபேந்திரன் மற்றும் அலோபதி மருத்துவர் பேராசிரியர் ​ெடாக்டர் சி.எம்.கே ரெட்டி ஆகியோர் இம்மருந்தைப் பற்றி விளக்கினர்.

இதன்படி இலேசானது முதல் மிதமான கோவிட்-19 தொற்றுக்கு Clevira வைரஸ் தடுப்பு மாத்திரைக்கான உற்பத்தி மற்றும் விற்பனைக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது Clevira விற்கு இப்போதிருக்கும் வைரஸ் தடுப்பு ஒப்புதலுக்கு மேல், இலேசானது முதல் மிதமான கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கான கூடுதல் அறிகுறிக்காக பயன்படுத்தலாம் என்ற ஒப்புதலாகும்.

ஐந்தாம் நாள் தொடங்கி Clevira மாத்திரையின் பயன்பாட்டால் மீட்பு வீதம் 86% ஆகும். சிகிச்சையின் 10- ஆம் நாள் வைரஸ் தொற்றிலிருந்து மீட்பு 100% ஆகும்.

4 ஆம் நாள் முதல் அனைத்து அக மற்றும் புற அறிகுறிகளிடமிருந்து விடுதலை காணப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு இருமுறை ஒரு மாத்திரை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கல்லீரல் மற்றும் சிறுநீரகத்திற்கு பாதுகாப்பானது. இந்தியா மற்றும் உலகளவிலான கொவிட்-19 சர்வதேச பரவல் மற்றும் வைரஸ் தொற்றுக்கான போரில், இலேசானது முதல் மிதமான கொவிட்-19 தொற்றுக்கு Clevira வைரஸ் தடுப்பு மாத்திரைக்கான உற்பத்தி மற்றும் விற்பனைக்கான ஒப்புதல் மிகப் பெரிய மைல்கல் ஆகும் .

சென்னையில் உள்ள இந்த apex நிறுவனம் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவத் துறையில் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, தரமான மருந்துகளின் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியில் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறது.

AIIMS மருத்துவமனையின் முன்னாள் பேராசிரியர் டொக்டர் எஸ்.எம். மாலிக் தலைமையில் 12 உறுப்பினர்கள் கொண்ட தொழில்நுட்ப வல்லுநர் குழு, இந்திய அரசாங்கத்தின் அங்கமான ஆயுஷ் அமைச்சகத்தின் கடுமையான ஆய்வின் முடிவிலேயே இலேசான மற்றும் மிதமான கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு Clevira மாத்திரைக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையான ஒப்புதல் நாட்டிலேயே முதல் முறையாக பல வித ஆராய்ச்சியின் முடிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

apex நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையினரால் 2017 இல் டெங்கு காய்ச்சலின் போது இந்திய மருத்துவத்துறைக்கு முதல் முறையாக Clevira அறிமுகப்படுத்தப்பட்டது.

விஸ்டர் எலிகளில் Clevira மிக விரிவாக ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது.

முதல் மற்றும் இரண்டாம் கட்ட மனித ஆராய்ச்சியிலும் Clevira வின் செயல்திறன் கண்டறியப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்று மருந்து மட்டுமில்லாது வலி நிவாரணி, காய்ச்சலுக்கு எதிரான மற்றும் த்ரோம்போசைட்டோப்பினியாவை திரும்பவும் சாதாரண நிலைக்கு கொண்டுவரும் மருந்தாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் தமிழ்நாடு அரசாங்கம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் மற்றும் ஆயுஷ் குழுவின் முன்னிலையிலும் முன்வைக்கப்பட்டது.Clevira சிரப் வடிவிலும் கிடைக்கிறது.


Add new comment

Or log in with...