களுத்துறையில் கிராம உத்தியோகத்தர் பிரிவொன்றுக்கு பூட்டு

களுத்துறையில் கிராம உத்தியோகத்தர் பிரிவொன்றுக்கு பூட்டு-Kalutara South Adikarigoda Area Isolated-NOCPCO

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிகாரிகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று (24) மாலை 6.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தனிமைப்படுத்தல் உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...