பாட்டிகளிடம் குழந்தை வளர்க்கக் கூடாது; 9 காரணங்கள் | தினகரன்

பாட்டிகளிடம் குழந்தை வளர்க்கக் கூடாது; 9 காரணங்கள்

குழந்தைகள் என்றால் அனைவருக்கும் பிரியம்தான். குழந்தைகளின் மழலை பேச்சு கேட்பதிலேயே ஒரு தனி சுகம்தான். இந்நிலையில், இளம் குடும்பங்களில் புதிதாக குழந்தைகள் கிடைக்கும்போது, பல பாட்டிமார்கள் அக்குழந்தைகளை பராமரித்து தங்களது உதவிகளை வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர்கள் அக்குழந்தைகளின் பெற்றோரின் அறிவுறுத்தல்களை அரிதாகவே பின்பற்ற முனைகின்றனர். இது அடிக்கடி முரண்பாடுகளுக்கு வழிவகுப்பதாக அமைகின்றது. குழந்தைகளின் பெற்றோர் முன்வைக்கும் விதிமுறைகளை பாட்டன், பாட்டிமார்கள் மீறும் வகையில் அமைகின்றது.

ஆகவே பாட்டன், பாட்டிமார்களின் உதவிகளின்றி பெற்றோர்  தங்களது குழந்தைகளை தாங்களே ஏன் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதற்கான  காரணங்களை நாம் இங்கு ஆராய்வோம்.

1. பழைமைவாதம்

கடந்த காலத்தில் குழந்தைகள் இளம் சூடான நீரில் குளிக்கவார்க்கப்பட்டார்கள். ஆனால், இப்போது அது தவறாக கருதப்படுகின்றது. அத்தோடு, பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு பசுப்பால் மற்றும் பழச்சாற்றினை அருந்தக் கொடுத்தனர். ஆனால், இப்போது தேவையான ஊட்டச்சத்துகள் மற்றும் விட்டமின்களை உள்ளடக்கிய அனைத்து வகையான படிமுறைகளும் குழந்தைகளுக்கு கிடைக்கும் வகையில் உள்ளன.

கடந்த காலத்தில் குழந்தைகள் மிகவும் இறுக்கமாக சுற்றி வைக்கப்பட்டார்கள்.ஆனால், அதைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள். இவ்வுலகில் எந்தக் காலத்திலும் எந்த உயிரினமாவது தனது குழந்தைகளை அசைய முடியாதவாறு வைத்துள்ளனவா?

ஆனால், இன்னும் பாட்டிமார்கள் இணையத்தளங்கள் மூலமாக வரும் புதிய விடயங்களுக்கு செவிசாய்க்க மாட்டார்கள்.

இதற்கு என்ன செய்வது: கடந்த கால வாழ்க்கை முறையில் சரியானது என்று கருதி கையாளப்பட்ட பல விடயங்கள் இன்று அர்த்தமற்றவையாக மாறிவிட்டன என்பதோடு, இதற்காக வாதிடுவதற்கும் விளக்கமளிப்பதற்கும் அஞ்சாதீர்கள்.

பாட்டிமார்கள் குழந்தைகளின் பராமரிப்பில், வாழ்க்கை முறையில் பங்கேற்று உதவ விரும்பினால், அவர்கள் புதிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பெற்றோராகிய நீங்கள் அவர்களுக்கு விளக்கமளிக்கலாம்.

2. தங்களது குழந்தை வளர்ப்பு முறைகளை அமுல்படுத்துதல்

கடந்த 30வருடங்களுக்கு முன்னர் குழந்தைகளின் வளர்ப்பில் சரியானது என்று கருதி கையளாப்பட்ட முறைகள், இன்றைய பழக்கவழக்கங்களிலிருந்து மிகவும் வேறுபட்டவையாகின்றன. பல கடுமையான விதிமுறைகளை தாத்தா, பாட்டிமார்கள் இப்போது முன்வைக்கின்றனர்.  எவ்வேளையிலும் குழந்தைகளை தூக்கிக்கொண்டிருப்பது தவறு என்று பிரபல்யமான கருத்து அவர்கள் மத்தியில் இருந்தது. குழந்தைகள் அழும்போதும் அவர்கள் அமைதியாக இருக்கவும்  அவர்களுக்கு நேரம் கொடுக்க வேண்டும் என்று பலர் நம்பினர். இதனை பல வயதானவர்கள் இன்று குழந்தைகளுடனான உறவில் அரவணைப்பு மற்றும் அன்பின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுகின்றனர்.

இதற்கு என்ன செய்வது: தங்களது குழந்தைகளுடன் ஏனையோர் எவ்வாறு பழக வேண்டும் என்பது தொடர்பான விதிமுறைகளை பெற்றோர் வகுக்க வேண்டும். ஒவ்வொருவரும் உரிய முறையில் விளங்கிப் பழகும் வகையில் விதிமுறைகளும் தெளிவாக இருக்க வேண்டும்.

3. பிள்ளைகளை வீணாக்குதல்

பெரும்பாலான பாட்டிமார்கள், தங்களது பேரப்பிள்ளைகளை வீணாக்கும் தவறை செய்கின்றனர். உதாரணமாக, பிள்ளைகள் இருக்கும் குடும்பங்களில் இரவுவேளை உணவு உட்கொண்ட பின்னர் தாம் பயன்படுத்திய பாத்திரங்களை கழுவ வேண்டும் என்ற கடப்பாடு ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் இருக்கலாம். ஆனால், பேரப்பிள்ளை ஒன்று தனது பாட்டி வீட்டில் தங்கியிருக்கும்போது  அப்பிள்ளையை மகிழ்விப்பதற்காக அனைத்தையும் தயார் செய்கின்றார் பாட்டி. இதன் காரணமாக பிள்ளைக்கு அதிருப்தியை ஏற்படுத்துவதோடு, அவர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க நபர்கள் அவர்களிடமிருந்து வேறுபட்ட விடயங்களை விரும்புவதால் என்ன செய்வது என்று பிள்ளைகளுக்கு புரியாது

இதற்கு என்ன செய்வது: பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு எவற்றை முற்றாக மறுக்கின்றனர் மற்றும் எவற்றை அனுமதிக்கின்றனர் என்பது தொடர்பில் அப்பிள்ளைகளின் தாத்தா, பாட்டிமார்களுடன் கலந்துரையாடுவது அவசியமாகின்றது. பாட்டி ஒருவர் அதை தவறு என்று எண்ணினால், பத்திரிகைகளில் வெளியாகும் கட்டுரைகளை பெற்றோர் எடுத்துக்காட்ட வேண்டும் என்பதோடு, தங்களது கல்வியின் மூலமாக தாங்கள் பெற்றுக்கொண்ட அனுபவங்களை பெற்றோர் தாத்தா, பாட்டிமார்களுக்கு நிரூபிக்க வேண்டும். தங்களது பேரப்பிள்ளைகளை நேசிக்கும் பாட்டிமார்களும் குழந்தை வளர்ப்பில் புதிய விதிமுறைகளை விருப்பத்துடன் ஏற்கத் தயாராக வேண்டும்.

4. குடும்ப வாழ்க்கையை நிர்வகித்தல்

பிள்ளை ஒன்றுக்கு உதவும் பட்சத்தில், அப்பிள்ளைக்கு தொடர்பில்லாத விடயங்களில் பாட்டிமார் ஆலோசனை வழங்கலாம். சமையல், பொழுதுபோக்கு மற்றும் பழக்கவழக்கங்களில் ஆலோசனைகளை பாட்டிமார்கள், பிள்ளைகளுக்கு வழங்கலாம்.

இதற்கு என்ன செய்வது: ஒரு கோட்டை வரைய  கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் புதிய குடும்ப வாழ்க்கையை ஆரம்பிக்கும்போது அவ்வாழ்க்கை முறையில் தனக்குள்ள வரையறையை பாட்டி புரிந்துகொள்வது முக்கியமானதாகின்றது.

5. பெற்றோரின் அதிகாரத்தை குறைத்துமதிப்பிடுதல்

பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள், பிள்ளைகளை வளர்ப்பதில் எப்போதும் தங்களது சொந்த அபிப்பிராயங்களை கொண்டிருப்பார்கள். தங்களது அபிப்பிராயங்களை பிள்ளைகளின் முன்னிலையில் அவ்வப்போது வெளிப்படுத்துவார்கள். இச்சூழ்நிலையை எண்ணிப் பாருங்கள். சிறுவர்கள் ஏதாவது தவறு செய்யும் பட்சத்தில் பிள்ளைகளை அமைதிப்படுத்தி நல்வழிப்படுத்தவோ அல்லது கண்டிக்கவோ அவர்களின் தாய் முனைகின்றாள். ஆனால், பிள்ளைகளின் பாட்டி, உங்கள் அம்மாவின் பேச்சைக் கேட்க வேண்டாம் என்கின்றார்.  சத்தத்தை நிறுத்துமாறும் பாட்டி கூறுகின்றார். இதனை அவதானிக்கும் பிள்ளையானது, பெற்றோருக்கு அதிகாரமில்லை என்று எண்ணுவதோடு, பெற்றோரின் பேச்சுக்கு மதிப்பில்லை என்றும் எண்ணுகின்றது. இது நிறைய சிக்கல்களுக்கு வழிவகுக்கின்றது.

இதற்கு என்ன செய்வது: பிள்ளைகள் இல்லாத வேளையில் தங்களது அபிப்பிராயங்கள் மற்றும் கருத்துகளை பெற்றோர், தாத்தா பாட்டிமார்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

6. ஒரு குழந்தையை சாந்தப்படுத்துதல்

சில பெற்றோர் தங்களது வாழ்க்கையில் மிகவும் பரபரப்பாக இருப்பதினால், தங்களது பிள்ளைகளை அடிக்கடி தாத்தா, பாட்டி வீட்டுக்கு அழைத்துச் செல்ல நேரிடுகின்றார்கள். ஆனால், பிள்ளைகள் தங்களது பெற்றோரிடமிருந்தே எல்லாவற்றையும் கற்றுக்கொள்கின்றார்கள். தனது தாயோ அல்லது தந்தையோ எப்போதுமே வேலை செய்துகொண்டிருந்தால், அவர்கள் தங்களது பெற்றோரை பார்க்காமைக்கு வேலைதான் காரணம் என்று பிள்ளைகள் கண்டுபிடிப்பார்கள். தாங்கள் எவ்வளவு களைப்படைகின்றார்கள் என்து தொடர்பில் பெற்றோர் முறையிட்டுக்கொண்டிருந்தால், பிள்ளை வளரும்போது வேலை செய்ய விரும்பாது

இதற்கு என்ன செய்வது: பெற்றோராகிய நீங்கள், உங்களது பணிகளை அட்டவணைப்படுத்திக்கொண்டு செயற்பட வேண்டும் என்பதோடு, உங்களது பிள்ளைகளுடனும் நேரத்தை செலவிட வேண்டும். பெற்றோராகிய நீங்கள் பணி புரியும் வேளையில் பாட்டிமார்களிடம் உதவி கேட்கலாம். ஆனால், முதல் வாய்ப்பை நீங்கள் பெறும்போது நீங்கள் பிள்ளையை திரும்ப அழைத்துச் செல்வீர்கள். அல்லாவிடின், அவர்கள் பெற்றோருக்கு தொல்லை தவிர வேறொன்றில்லை என்று பிள்ளைகள் உணரக்கூடும்.

7. முக்கிய தீர்மானங்கள் எடுத்தல்

பிள்ளைகளின் வளர்ப்பில் முக்கியமான தீர்மானங்களை எடுத்தலாகும். இதனை பெற்றோர் செய்யாவிட்டால் தாத்தா, பாட்டிமார்கள் செய்வார்கள்.

இதற்கு என்ன செய்வது: பெற்றோர் தங்களது பிள்ளைகளின் மகிழ்ச்சியிலும் ஆரோக்கியத்திலும் முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும். பிள்ளைகளுக்கு தேவையான உணவுகளையும் ஆடைகளையும் பெற்றோராகிய நீங்களே வாங்கி வழங்க வேண்டும்.

8. மிக்க பாதுகாப்பு

வெப்பமான காலத்தில் கூட, அதிகளவான ஆடைகளை அணியுமாறு பிள்ளைகளுக்கு தாத்தா,பாட்டிமார்கள் கூறுகின்றனர். பிள்ளைகளின் நடைப்பயிற்சியை தவிர்க்கின்றார்கள். ஏனெனில் பிள்ளைகள் ஓடக்கூடும் என்று தாத்தா, பாட்டிமார்கள் அஞ்சுகின்றார்கள். அவர்களுடன் அவர்களின் வீட்டுப்பாடங்களை செய்ய முற்படுகின்றனர். இதற்கு பாட்டி உதவ விரும்புகின்றாள். ஆனால், இது பல சிக்கல்களை தோற்றுவிக்கின்றது. இது குழந்தை வளர்ப்பில் கடினத்தை உருவாக்கின்றது.

இதற்கு என்ன செய்வது: பெற்றோராகிய உங்களின்  இடத்திலிருந்து சிறிது நேரத்தை செலவிட பாட்டியை அழைக்கவும். அவ்வேளையில் பெற்றோருடன் பிள்ளைகள் நடந்துகொள்ளும் முறை, அவர்களுக்கு என்ன கடமைகள் உள்ளன என்பதை பாட்டிக்கு தெரியப்படுத்துங்கள்.  அதே விதிமுறைகளை வீட்டில் பின்பற்றுமாறு பாட்டியிடம் கேளுங்கள்.

9. அதிகமாக உணவளித்தல்

ஆய்வுகளின்படி பெரும்பாலான பிள்ளைகள் தங்களது தாத்தா, பாட்டிமார்களுடன் அதிகளவான நேரத்தை செலவிடுகின்றார்கள். இது பிள்ளைகள்  தங்களது பெற்றோருடன் தங்கியிருப்பதுடன் ஒப்பிடுகையில் உடற்பருமன் அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் எளிதில் பிள்ளைகளினால் கையாளப்படுகின்றார்கள். பிள்ளைகள் அழத் தொடங்கும் பட்சத்தில், பிள்ளைகளுக்கு வீட்டில் உட்கொள்வதற்கு அனுமதிக்காத உணவுகளைக் கூட உட்கொள்ள அனுமதிக்கிறார்கள் பாட்டிமார்கள். 

இதற்கு என்ன செய்வது: அதிகளவான நிறையினால் ஏற்படும் பிரச்சினைகளை பாட்டிமார்களுக்கு தெளிவுபடுத்துங்கள்.


Add new comment

Or log in with...