உலகெங்கும் தொடர்ந்து உருமாறும் கொரோனா

கொரோனா வைரஸ் அதிக அளவில் உருமாறி வருவது உலக அளவில் சுகாதாரத்துறைக்குப் பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் பிரிட்டனில் B117 என்ற புதுவகை வைரஸ் தொற்றின் உருமாற்றம், அடையாளம் காணப்பட்டது. தொடர்ந்து தென்னாபிரிக்காவில் B1351 எனும் புதிய வகை வைரஸ் திரிபு அடையாளம் காணப்பட்டது.

ஜனவரி மாதம், பிரேசிலில் இருந்து திரும்பியவர்களிடம் P-1 என்ற வகை தொற்று உறுதி செய்யப்பட்டது. ஜப்பான் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட வழக்கமான பரிசோதனையில், அந்த வைரஸ் அடையாளம் காணப்பட்டது.

கடந்த மாதம் டோக்கியோ மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் 70 வீதத்தினருக்கு, Eek என்ற வைரஸ் வகை உறுதி செய்யப்பட்டது. இரட்டிப்பாக உருமாற்றம் அடையும் வைரஸ் தொற்று கலிபோர்னியாவிலும், இந்தியாவிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவ்வாறு உருமாறி வரும் புதிய வகைக் வைரஸ்கள் வேகமாகப் பரவும் தன்மை கொண்டவை. அவை எதிர்ப்புச் சக்தியை மட்டுப்படுத்தி, தடுப்பூசிகளின் செயல்திறனையும் பாதிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.


Add new comment

Or log in with...