இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் பங்களாதேஷ் அணி 302/2 ஓட்டங்கள் | தினகரன்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் பங்களாதேஷ் அணி 302/2 ஓட்டங்கள்

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பங்களாதேஷ் அணி இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 302 ஓட்டங்களை பெற்றுள்ளது.

பங்களாதேஷ் அணி சார்பாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக தமீம் இக்பால் -சயிப் ஹசன் ஆகியோர் களமிறங்கினர்.சயிப் ஹசன் 6 பந்துகளை எதிர் கொண்ட போது விஷ்வ பெர்னாண்டோவின் பந்தில் ஆட்ட மிழக்க அவருடன் இணைந்தார் .நஜ்முல் ஹூசையின் சான்டோ இருவரும் நிதானமாக ஆடிய வேளையில் தமீம் இக்பால் 90 ஓட்டங்கள் பெற்றிருந்த போது ஆட்டிழந்தார்.அவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்காக 144 ஓட்டங்களை குவித்தனர்.பின்னர் சான்டேவுடன் இணைந்தார் அணியின் தலைவர் மெயுமுனுல் ஹக் இருவரும் நன்றாக துடுப்பெடுத்தாடி முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்த வேளை நஜ்முல் ஹூசையின் சான்டோ,மெயுமுனுல் ஹக் முறையே தலா 126,64 ஓட்டங்களை பெற்று களத்தில் உள்ளனர்.நஜ்முல் ஹூசையின் சான்டோ தனது கன்னி டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார்.பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக விஷ்வபெர்னாண்டோ 61 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.இன்று போட்டியின் இரண்டாவது நாளாகும்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று கண்டி – பல்லேகலை மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இலங்கை அணிசார்பில், மேற்கிந்திய தீவுகள் தொடரிலிருந்து பாதியில் திரும்பிய அஞ்சலோ மெதிவ்ஸ் மீண்டும் அணிக்குள் இணைக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாடிய தினேஷ் சந்திமால், முதல் போட்டிக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், வேகப்பந்துவீச்சாளர் லஹிரு குமார மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார்.

 

இலங்கை அணி

திமுத் கருணாரத்ன (தலைவர்), லஹிரு திரிமான்ன, ஓசத பெர்னாண்டோ, அஞ்செலோ மெதிவ்ஸ், பெதும் நிஸ்ஸங்க, தனன்ஜய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, சுரங்க லக்மால், வனிந்து ஹசரங்க, லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ

பங்களாதேஷ் அணி

தமிம் இக்பால், சயிப் ஹசன், நஜ்முல் ஹுசைன் செண்டோ, மொமினுல் ஹக் (தலைவர்), முஷ்பிகூர் ரஹீம், லிடன் டாஸ், மெஹிடி ஹாசன், தாஜுல் இஸ்லாம், டஸ்கின் அஹமட், அபு ஜெயட், எப்டொட் ஹுசைன்.


Add new comment

Or log in with...