இலங்கை உலகக்கிண்ண சம்பியன் பட்டம் வென்ற 25 வருட பூர்த்தியை கொண்டாடியது

- அமானா வங்கி

தேசத்துக்கு பெருமை சேர்த்த அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில், 1996ஆம் ஆண்டு கிரிக்கட் உலகக் கிண்ணத்தை வெற்றியீட்டியிருந்ததன் 25வருட பூர்த்தியை அமானா வங்கி கொண்டாடியிருந்தது. உலகக் கிண்ண வெற்றியை கொண்டாடும் வகையில், வங்கியினால் புதிர் போட்டியொன்று சமூக வலைத்தளங்களினூடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் போது உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணியின் பெறுபேறுகள் தொடர்பான வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. இந்த வினாக்கள் அனைத்துக்கும் சரியான பதிலளித்திருந்த கவிஷா சேனாவீர, உஸ்மான் கௌஸ் மற்றும் இஷ்ரத் இம்தியாஸ் ஆகியோர் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

உலகக் கிண்ண வெற்றியை கொண்டாடும் வகையில், உலகக் கிண்ணம் வென்ற இலங்கை கிரிக்கட் அணித் தலைவரான அர்ஜுன ரணதுங்கவின் பங்கேற்பில் வங்கியின் வளாகத்தில் விசேட வைபவமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உலகக் கிண்ண வெற்றியை கொண்டாடும் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசுகளை அர்ஜுன பகிர்ந்தளித்திருந்தார். 

இந் நிகழ்வுக்கு வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர், பிரதம இடர் அதிகாரி எம் எம் எஸ் குவைலித், பிரதம தொழில்நுட்ப அதிகாரி ரஜித திசாநாயக்க, செயற்பாடுகளுக்கான உப தலைவர் இம்தியாஸ் இக்பால், நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் உப தலைவர் சித்தீக் அக்பர் மற்றும் சட்டப் பிரிவின் தலைமை அதிகாரி சுலானி தயாராட்ன ஆகியோரும் கலந்து கொண்டனர். 

இந் நிகழ்வின் போது, இலங்கைக்கு வெற்றிக் கிண்ணத்தை பெற்றுக் கொடுப்பதில் அணிக்கு சிறந்த தலைமைத்துவமளித்திருந்த அர்ஜுன ரணதுங்கவை பாராட்டி விசேட நினைவுச்சின்னமொன்றையும் வங்கி அன்பளிப்புச் செய்திருந்தது.

இந்த நிகழ்வில் அர்ஜுன ரணதுங்க கருத்துத் தெரிவிக்கையில், “25 வருடங்களுக்கு முன்னர் எமது புகழ்பெற்ற வெற்றி தொடர்பில் பொது மக்கள் காண்பிக்கும் உணர்வுபூர்வமான வரவேற்பு பெரும் கௌரவமாகவும் மகிழ்ச்சியாகவும் அமைந்துள்ளது.” என்றார்.


Add new comment

Or log in with...