விசேட தேவையுடைய சிறுவர்களை பாடசாலைகளில் இணைக்கும் வேலைத்திட்டம்

பாடசாலைக் கல்விக்கு உட்படுத்தப்படாதுள்ள விசேட தேவையுடைய சிறுவர்களை பாடசாலைகளில் இணைக்கும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறன் கொண்ட சுமார் இருநூறு சிறுவர்கள் பாடசாலைக் கல்விக்கு உட்படுத்தப்படாதுள்ளமை கண்டறியப்பட்டதையடுத்து   இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நவஜீவன அமைப்பு கல்வியமைச்சுடன் இணைந்து இத்திட்டத்தினை செயற்படுத்தி வருகிறது.

இத்திட்டம் தொடர்பாக கல்விச் சமூகத்திற்கு தெளிவூட்டும் விசேட செயலமர்வு செவ்வாய்க்கிழமை (20)  மட்டக்களப்பில் நடைபெற்றது.

இதில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை வலயக் கல்விப் பணிமனை அதிகாரிகள், ஆசிரியர்கள், சிறுவர் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் இச் செயலமர்வில் பங்கேற்றனர்.

மாற்றுத்திறன் கொண்ட சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இதன்போது முன்மொழியப்பட்டு தீர்வுகாணும் வழிகள் குறித்து    இங்கு ஆராயப்பட்டது.

நவஜீவன அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ். ரவிச்சந்திரன் மற்றும் மாகாண விசேட கல்வி இணைப்பாளர் எஸ். ஜனார்த்தனன் உள்ளிட்ட பலர் இங்கு கருத்துரை வழங்கினர்.

(ஏறாவூர் நிருபர்)

 


Add new comment

Or log in with...